பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
240

தமிழர்நாட்டுப்பாடல்கள்


மான்னேரு வெத்திலை
மதுரைக் கழிப்பாக்கு
தேனுாரு சுண்ணாம்பு
தெகட்டுதடி தேன் கரும்பே!
கீழத் தெருவிலே
கிழவி மவ
மேலத் தெருவிலே
மேவட்டம் போடுதாளே!

குறிப்பு: இப்பாட்டில் உவமைகள், பனையேறி கருப்பட்டி காய்ச்சும் தொழிலாளர்களான நாடார்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப்பட்டன.

பொடியென்பது-வசியப்பொடி முன்னரே வசிய மருந்து பற்றிய நம்பிக்கையைக்குறிப்பிட்டோம்.

சேகரித்தவர்
இடம்:
M.P.M.ராஜவேலு.
தூத்துக்குடி வட்டாரம்.

தாளம் போட்டு நடக்கிறாளே!

அடிக்கடி அவன் வெளியே போகும்பொழுது அவனுடைய நண்பர்கள் அவனோடு போகிறார்கள். அவனுடைய காதலி அவனைத் தனிமையில் சந்திக்க விரும்புகிறாள். முடியவில்லை. ஒரு நாள் அவனைத் தனியே சந்திக்கிறாள். கூட்டத்தில் போகும் பொழுது எப்படி அவனை அழைப்பதென்று அவனைக் கேட்கிறாள். அவன் அதற்குப் பதில் சொல்லாமல் அவள் மீது அவனுக்கிருக்கும் ஈடுபாட்டையும், காதலையும் வெளிப்ப டையாகச் சொல்லுகிறான்.அவள் நாணமடைந்து முகஞ் சிவக்கிறாள்.

காதலி:

ஆளு கருத்தாளு
அரமனைக்கு ஏத்த ஆளு
ஆளோடு போகும் போது-நான்
ஆரை விட்டுக் கூப்பிடட்டும்?
வெத்தலையைக் கையிலெடுத்து வெறும் பாக்கை வாயில் போட்டு சுண்ணாம்பு இல்லையின்னு கத்தி வந்தால் ஆகாதா?

காதலன்:

 சாலையடி ரோட்டுப்பாதை
காலு கையை வீசிப்போட்டு