பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
241

காதல்


தங்கப் பானைகுடம்
தவல பானை தலையில தாழமடம் கொண்ட குப்பி சாலையிலே என்னைக்கண்டு தாளம் போட்டு
நடக்கிறாளே நடையிலே! கலைாபிடுங்கி கைகழுவி
கரைப் பாதை போற பொண்ணே முகம் கழுவி முத்தம் தந்தால் மூவாயிரம் பொன் தருவேன் சிரகி பறக்குதடி
சீனாவானா கம்மாயிலே
சீவன் கிடக்குதடி
செண்டு மலர் ஒண்ணுலேயும்.

வட்டார வழக்கு: சிரகி-குருவி; சீனாவானா கம்மாய்குளத்தின் பெயர் (சீனாவானா என்பவர் தூத்துக்குடியில் பெரிய பணக்காரக் குடும்பத்ன்தச் சேர்ந்தவர்), செண்டு மலர் ஒண்ணு-காதலியைக் குறிப்பிடும்.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
தூத்துக்குடி வட்டாரம்.

ஊடல் வேம்பாச்சே!

குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்கு வரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். "சிறிது காலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும்' என்று எச்சரிக்கிறான்.

ஆண்:

சின்னச் செருப்பு மாட்டி
சிறு கலயம் கஞ்சி கொண்டு வருண முழி முழிச்சு
வாராளைய வடகாடு

பெண்:

பாதை பிரிவாச்சே!
பக்கப் புளி ஒண்டாச்சே ஊடாலே வேம்பாச்சே உனக்கும் எனக்கும் பகையாச்சே