பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவும் தொழிலும் 437

   தன்னாலே ஒடச் சொல்லி 
   தாங்குதானே இஞ்சின்துரை 
   பட்டிக்காட்டு பருத்திகளை 
   பட்டணத்து ரோதைகளை 
   ஓடாத ரோதைகளை 
   ஓட்டிவைப்பார் தாடிதுரை.

வட்டார வழக்கு: மெல்லாவுசு-மில் ஆபீசு ரோதைசக்கரம்; சூச்சியம்-ஸ்விட்ச், இஞ்சின் துரை-இஞ்சினியர். சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு தூத்துக்குடி

             நெல்லை மாவட்டம்.
  அவன் மில்லில் வேலை பார்க்கிறான். நூல் விலையாகிறது. முதலாளிக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் அவன் வீட்டிலிருக்கும் குமரிக்குக் கலியாணம் செய்ய வழியில்லை. நூல் விலையாகிவிட்டதாம். குமரி விலையாகவில்லையாம்.
   நூறு அடியாய் கோபுரமாம் 
   நூலு நூக்கும் மில்லாவுக 
   நூலு விலை ஆகிட்டாலும் 
   குமரி விலை ஆகல்லையே! 
 தொழிலாளர் வாழ்க்கை நிலையை இப்பாடல் எவ்வளவு நன்றாகச் சித்திரிக்கிறது!
   சோம்பலும் உழைப்பும்
  கணவன் சோம்பேறி. மனைவி உழைப்பாளி. கணவனைப் பன்முறையும் உழைத்துப் பிழைக்குமாறு அவள் வற்புறுத்துகி றாள். அவன் இணங்கவில்லை. அவள் “கொழுக்கட்டை செய்து தருகிறேன் என்னோடு வேலைக்கு வா” என்றழைக்கிறாள். அவன் "தண்ணிர் தவிக்கும், வரமாட்டேன்" என்கிறான். அவள் படிப்படியாக அவனோடு வாது செய்து, அவனுடைய சாக்குப் போக்குகளையெல்லாம் மறுத்துரைத்து வேலைசெய்ய இனங் கும்படி செய்கிறாள். இது போன்ற பாடலொன்று நெல்லை மாவட்டத்தில் வழங்கி வருகிறது. "கீரை விதைக்கலாம் வா" என்ற தலைப்பில் அது "தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்" என்ற தொகுப்பில் வெளியாகியுள்ளது. இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்கிவருகிறது.