பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒப்பாரி - 46.9

குழந்தைக்குப் பங்குமில்ல-மதுரைக்

கோட்டுலயும் நியாயமில்ல

மஞ்ச வச்சாப் பிஞ்செறங்கும்

மணல் போட்டா வேர் எறங்கும்

மந்திரிமார் பெத்தமக

மலடி எனும் பேரானேன்

இஞ்சி வச்சாப் பிஞ்செறங்கும்

எருப்போட்டா வேர் எறங்கும்

இந்திரனார் பெத்த மக

இருசி யெனும் பேரானேன்.


வட்டார வழக்கு: மஞ்சி-மேகம்; மா-மாமரம்; சினுக்கு வரி-கூந்தல் சிக்கலை எடுக்கும் இரும்பு ஊசி; குண்ணிருச்சே-குன்றி விட்டதே (பேச்சு); மத்தொரு-மற்றும் ஒரு (பேச்சு); எடத்தே-இடத்தை; பெறக்கி-பொறுக்கி (பேச்சு); நிண்ணெரியும்-நின்று எரியும் (பேச்சு); வளசல்-குடும்ப வீடுகளுள்ள வளைவு தேக்கிலை-மலையடிவாரக் கிராமங்களில் தேக்கிலையில் உணவு படைப்பார்கள்; அடரி-அடர்ந்து; இருசி-மலடி.


சேகரித்தவர்: S.M. கார்க்கி

இடம்: சிவகிரி, நெல்லை.


     நின்னொரு நாள் வாழலியே

மலையோரத்துக் கிராமம் ஒன்றில் இளைஞன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு மணமாகி மனைவியோடு இன்பமாக வாழ்ந்து வந்தான். அவ்வூராருக்கும், அடுத்த ஊரில் வாழ்ந்து வந்த வேறு ஓர் சாதியினருக்கும் நீண்ட நாளாகப் பகைமை உண்டு. இப்பகை முற்றி கலகமாக மாறிற்று. அவர்கள் படையெடுத்து வந்து பகல் வேட்டுப் போட்டு ஊரைக் கொள்ளையிட்டார்கள். இளைஞன் ஊரைக் காப்பாற்ற போராடி னான். போராட்டத்தில் அவன் உயிர் நீத்தான். உளுந்தும், சாமையும் காயப்போட மலைச்சரிவுக்குச் சென்றிருந்த அவனது மனைவி செய்தி அறிந்து அரற்றினாள். அழுதடித்துக் கொண்டு ஊர் திரும்பினாள். அவனுடைய தங்கைக்கு ஆள் விட்டாள். அவள் அவனோடு வாழ்ந்தது சில ஆண்டுகளே. ஆயினும் வயல் வேலைகளை யெல்லாம் இருவரும் சேர்ந்தே மகிழ்ச்சி