பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

470 தமிழர் நாட்டுப் பாடல்கள்

யோடு ஒத்துழைத்துச் செய்து வந்தனர். அவளுடைய உணர்ச்சித் துடிப்பும், வருங்காலம் பற்றிய துன்ப நினைவுகளையும் எண்ணி ஒப்பாரியாகப் பாடி புலம்புகிறாள். இவளது தனிமையைப் போக்கக் குழந்தையும் இல்லை.


          கொள்ளை

பட்டணமும் ஜில்லாவாம்

பவுஷாப் பிழைக்கையிலே

பகல் வேட்டுப் போட்டல்லவோ

பட்டணத்தைக் கொள்ளையிட்டார்

தெக்ஷிணையாம் ஜில்லாவாம்

செருக்காப் பிழைக்கையிலே

தீ வேட்டுப் போட்டல்லவோ

தெக்ஷிணையைக் கொள்ளையிட்டார்

        வருமுன் மாய்ந்தான்

உருண்ட மலையோரம்

உளுந்து கொண்டு காயப்போட்டேன்

உளுந்து அள்ளி வருமுன்னே-

     உன்னோட வாசலில 

உருமிச்சத்தம் கேட்டதென்ன

சாய்ஞ்ச மலையோரம்

சாமை கொண்டு காயப்போட்டேன்

சாமி வருமுன்னே

சங்குச் சத்தம் கேட்டதென்ன?

        பிள்ளையில்லை


முட்டங்கால் தண்ணியில

முத்தப் பதிச்சு வச்சேன்

முத்தெடுக்கப் பிள்ளையுண்டோ?-

        உனக்கு 

முடியிறக்கப் பிள்ளையில்லை

கரண்டக்கால் தண்ணியில

காசப் புதைச்சு வச்சேன்

காசெடுக்கப் புள்ளையுண்டோ?-உனக்கு

கருமம் செய்யப் புள்ளையில்லை


   பாதி நாள் வாழவில்லை

பாலூத்திப் பாத்தி கட்டி

பாக்குமரம் உண்டாக்கி