பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 525

            ஒப்பாரி 


   தாழம்பூக் கெண்டியிலே 
   தண்ணிரோ கொண்டு வந்தார் 
   தண்ணீர் இறங்கவில்லை 
   தாமரைப் பூ மேனியிலே 
   மாதாளம்பூக் கெண்டியிலே 
   மருந்து வகை கொண்டுவந்தார் 
   மருந்தோ இறங்க வில்லை 
   மல்லிகைப் பூ மேனியிலே 
   பஞ்சு கொண்டு பாலொழுக்கி 
   பட்டு கொண்டு வாய் துடைத்து 
   என்ன வேணுமின்னு சொல்லி 
   ஈஸ்வரனார் கேட்டாராம் 
   பொன்னும் வேண்டாம் 
   பொருளும் வேண்டாம் 
   பூலோகம் வேணுமின்னர் 
   காசு வேண்டாம், பணமும் 
                     வேண்டாம் 
   கயிலாசம் வேணுமின்னார் 
   அப்போ மகானிவர்க்கு 
   ஆயுள் முடிந்ததுவே
   செப்பியதோர் காலதூதர் 
   சீக்கிரமாய்த் தான் வளைஞ்சார் 
   காலன் கொண்டு போறானே 
   கைலாசம் தீர்த்தமாட 
   எமன் கொண்டு போறானே 
   எமலோகம் தீர்த்தமாட 
   முத்துப் போல் கண்ணிரை-மக்கள் 
   முகமெல்லாம் சோர விட்டார் 
   பவளம் போல் கண்ணிரை-மக்கள் 
   பக்கமெல்லாம் சோர விட்டார் 
   குளிப்பாட்டி கோடி கட்டி, 
   கொண்டு வைத்தார் குறிச்சியிலே 
   முன்னுறு மூங்கியிலே முதல் 
   மூங்கி கொண்டு வந்தார் 
   நானூறு மூங்கியிலே 
   நல்மூங்கி கொண்டுவந்தார். 
   மூங்கில் பாய் தானெடுத்து 
   முத்தமெல்லாம் பந்தலிட்டார்

A 519-34