பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வங்கள்

57



இத்தகைய நம்பிக்கை இன்னும் மறையவில்லை. விஞ்ஞானக் கருத்துகள் கிராம மக்களிடம் பரவினால்தான் இவ்வழக்கங்கள் ஒழியும்.

சுவாமி வருத்துவதையும், சுவாமி குறி சொல்லுவதையும், நிவாரணம் சொல்லுவதையும் பாட்டில் கோணங்கி சொல்லுவான்.

இப்பாட்டின் உருவத்தை மேற்கொண்டே பாரதி ‘புதிய கோணங்கி’ப் பாட்டு பாடியுள்ளார். இந்தியாவின் வருங்காலத் தையே பாரதி குறியாகச் சொல்லுகிறார். அத்தகைய கோணங்கிகள் நமது வருங்காலத்தைச் சொல்ல இன்றும் வருகிறார்கள். அவர்கள் பழைய உடைகளையே கூலியாகக் கேட்கிறார்கள். நம்மைப் புகழ்ந்து, வருங்காலத்தில் சீரும் சிறப்பும் உண்டாகும் என்று கூறியவுடனே, நாம் உச்சி குளிர்ந்து அவர்கள் கேட்டதைக் கொடுத்து விடுகிறோம்.

தெய்வ வணக்கம்

பாரோர்கள் நற்புகழும்
பட்டண மருதூர் வாழும்
பதி னெட்டாம் படிக் கறுப்பா !
பதி னெட்டாம்படிக் கறுப்பா !
ஊருக்கு மேல் புரமாம்;
ஒத்த உடை மரமாம்
உடை மரத்தின் கீழிருக்கும்,
உத்தமனே வாருமையா !
சாலைப் பாதை மேல்புரமாம்
சமர்த்தா குடியிருக்கும்
கொத்தளத்து வாழ் கறுப்பா, கூவியழைத்தேனையா
துண்டிக் கறுப்பா;
துடியான வாள் வீரா
சுற்றி வர கம்மாக் கரை;
சூழ வர கம்மாக் கரை;
சூழ வர உடங்காடு
உடங்காட்டு மத்தியிலே
உத்தமனே தனியிருக்கும்
எண்ணெய்த் தலையழகும்;