பக்கம்:தமிழர் மதம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரை யியல் "எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப.33 ( கஉ0), ‘‘அவைதாம், நூலி னான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி தான். 3 கஎரு C"நிறைமொழி மாந்தர் ஆனையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (ஷ் கசஉக), (ஷ கசகூச), என்பவற்றால், ஆரியர் வரு முன்பே, தனித் தமிழ் மறை நூல் களும் மந்திர நூல்களும் குமரி. நாட்டில் தோன்றி யிருந்தன வென்பது,தெள்ளத் தெளிவாம். இவற்றையே பேரா. கா.சுப்பிர மணியப் பிள்ளை தம் (திருநான்மறை விளக்க'வுரையிற் குறிப் பிட்டார். பண்டைத் தனித் தமிழ் மறைகளும் மந்திர நூல்களும் பிற நூல்களுடன் ஒருங்கே அழிக்கப்பட்ட பின், பிராமணரும் அவ ரைக் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றிய தமிழரும், ஆரிய வேதங் களையே பொது மறையாகப் போற்றி வந்தனர். கிறித்துவிற்கு முற்பட்ட முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே வேரூன்றின, ஆரியக் கொள்கைகளும் ஒழுகலாறுகளும், கி.பி. ௩-ஆம் நூற் றாண்டில் மாணிக்க வாசகர் காலத்தில் ஆழ வேரூன்றி விட்டன. அதனால், அவருக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டி லெழுந்த ஆரிய ஆகமங்கள், இம்மியும் ஐயுறவும் எதிர்ப்பு மின்றித் தெய்வ வுரை போல் எழுத்துப்படி நம்பப்பட்டு விட்டன. வரலாற்றையும் தமிழியல்பையும் அறியாத சில குருட்டுச் சிவனியர், வடசொல் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, சிவனியம் ஆரிய வழிப்பட்ட தென்றும், திருக் கோவில்களில் சமற்கிருத வழிபாடே நடைபெறில் வேண்டு மென்றும், பிதற்றி வருவதால், இற்றை ஆரிய மதவியற் சொற்கட் கெல்லாம் நேர்த் தென் சொற்கள் கீழே வரையப் பட்டுள்ளன. சொல் வர லாறு வரையப் படாத இடங்களில், இடைக் கோட்டின், இடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/191&oldid=1429349" இலிருந்து மீள்விக்கப்பட்டது