பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உருவாக்கப்பட்டவராதலால் சிலப்பதிகாரத்தில் இக்கொள்கைகளை வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னருக்கும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ்நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.


'வாழியரோ வாழி
        வருபுனல் நீர் வையை
குழு மதுரையார் கோமான்
        தன் தொல்குலமே!
'வாழியரோ வாழி
        வருபுனல் நீர்த் தன் பொருதை
சூழ்தரும் வஞ்சியர் கோமான்
        தன் தொல்குலமே'
'காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
        பூவிரி கூந்தல் புகார்

இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள். தமிழ் அறிஞர்கள், மார்க்ஸியவாதிகளின் கூட்டுமுயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன்முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.

9