பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியமும் இன்கலைகளும் மகத்தான வளர்ச்சிபெற்று உலகப் புராதனப் பண்பாடுகளுள் சிறந்ததொன்று என விளங்கியது. தமிழ்நாடு, ரோம் சாம்ராஜ்யத்தோடும் இந்தோனேசியாவோடும் வாணிபத் தொடர்பும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து மிளகு, முத்து, சந்தனம், தேக்கு முதலிய பொருள்கள் ஏற்றுமதியாயின.

இந்தியத் தொல் பொருள்களில் சில, கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும், பின்புமாகத் தோன்றியவை. அவற்றின் தோற்றகாலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை. பழங்கற்காலச் சின்னங்களும், நடுகற்காலச் சின்னங்களும் இந்தியா முழுவதிலும் கிடைக்கின்றன. புதிய கற்காலச் சின்னங்கள் கிறிஸ்து சகாப்தத்திற்கு அணித்தானவை. அவற்றில் கல் ஆயுதங்களும், மண்பாண்டங்களும் அடங்கும். வட இந்தியாவில் புதிய கற்காலத்தில் செம்புப் பண்பாடு தோன்றியது. இவ்வுண்மைக்கு மோஹன்ஜோதராத் தொல் பொருள்களே சான்தாக அமையும். மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ என்ற பகுதியில் செம்புக் கருவிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சாதாரண ஈட்டி முனைகளும், பிளவற்ற ஈட்டி முனைகளும், போர்வாள்களும், மீன் தூண்டில்களும் இவ்விடத்தில் அகப்பட்டன. அவற்றுள் சில திறமையான வேலைப்பாடுடையவை. இவற்றுள் சில மிகவும் கனமாகவிருக்கின்றன. இவை தொழில்களில் பயன்பட்டிரா. பூசைக்குரியனவாக இவை இருந்திருக்கலாம். வட இந்தியாவில் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வெண்கலச் சாமான்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இரும்பு கி.மு.1000 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்திருக்கலாம்.

ஆரியர்களுக்கு அதற்கும் முன்னரே இரும்பின் பயன் தெரிந்திருக்க வேண்டும். செம்புக்காலம் என்றதோர் பண்பாட்டுக் கட்டம் தென்னிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கும், இரும்புக் காலத்திற்கும் இடைவெளியற்ற தொடர்பு உள்ளது. தென்னாட்டில் வரலாற்று முற்காலப் புதை பொருள் தலங்களில் இரும்புக் கருவிகள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் இரும்புக் கணியம் ஏராளமாகக் கிடைக்கிறது என்பதைக் காணும்பொழுதும், சங்க வளையல் முதலிய அணிகலன்களைச் செய்வதற்கு இரும்பு அரங்கள்

30