பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெற்பின் வடபுறத்து விளையாடினவே!
மேற்கு-அரபிக் கடல் கிழக்கு வங்கக் கடல்
இல்லை, என்ன வியப்பிது?

தமிழுணர்வுக்கும் திராவிடஸ்தான் கருத்துக்கும் முரண்பாடு இருந்தபோதிலும் பாரதிதாசன் போன்றோரின் எழுத்துக்களில் ஆழ்ந்த தமிழுணர்வு இருக்கிறது என்று தனிநாயக அடிகள் எழுதுகிறார்.

‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றும் ‘தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்றும் பாடிய பாரதிதாசன் கவிதையில் தமிழுணர்வு இருக்கிறது. ஆனால் பிற மொழிகளை வெறுப்பதையும், பிற மக்களை இழிவுபடுத்துவதையும், தமிழின் உயர்வுக்கு ஆதாரமாக்கும்போது, அவரது எழுத்துக்கள் தமிழ் வெறியாகத் தாழ்ந்து விடுகின்றன.

‘ஆரியன் அல்லேன் எனும் போதில்
எத்தனை மகிழ்ச்சி, எத்தனை மகிழ்ச்சி!’
‘அயல் என்று கொட்டுக முரசே, உறவான
திராவிடர் அல்லார்.’
‘பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைகருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே.’

(பாரதி தாசன் கவிதைகள்)

முரண்பாடற்ற தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் சுட்டிக் காட்டுவது சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளின் எழுத்துக்களை, அவற்றில் சுதந்தர ஆர்வம் இல்லை. பிற மொழி வெறுப்பு உண்டு.

முரண்பாடுள்ள தமிழுணர்வு என்று அவர் காட்டுவது தேசியக் கவிகளின் படைப்புக்களையும், பாரதிதாசன் முதலிய திராவிட இயக்கத்தாரின் பாடல்களையும். இவற்றுள் தேசியக் கவிகள் தேசிய உணர்விற்கும். மொழியுணர்விற்கும் பாலம் அமைக்க முயலுகிறார்கள் என்று அவர் சொல்லுகிறார். வெற்றி பெற்றதாகச் சொல்லவில்லை. திராவிட இயக்கத்தினரின் பாடல்களில், திராவிடஸ்தான் பற்றுக்கும், தமிழுணர்வுக்கும் முரண்பாடு இருக்கிறது என்றாலும் அவர்களது

58