பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழர் வரலாறு "யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந்து ஐயகல்". மகத வினைஞர், மராட்டக் கம்மர், அவந்திக் கொல்லர், தண்டமிழ் வினைஞர்களோடு கூடிப் பணிபுரியும் யவனத் தச்சரை மணிமேகலை பாராட்டுகிறது. "மகத வினைஞரும், மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி". - மணிமேகலை : 19 : 107 - 109. கி. பி. 500க்கும் 1000க்கும் இடையில் எழுதப்பட்ட உதயணன் பெருங்கதை என்ற நூல் யவனர்களைப் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அது, யவனர் இயற்றிய அணிமணி, "யவன மஞ்சிகை", (காதை : 32 : 76) பாவை விளக்கு, "யவனப் பாவை அணிவிளக்கு (17 : 175) யவனர் களின் கைவேலைப்பாடு சிறக்கப் பண்ணப்பட்டமகர வீணை "யவனக் கைவினை மாணப் புணர்ந்தோர் மகரiணை" (16 : 22 - 23) பெட்டி, "யவனப் போழை" (22 : 213) பொன்னால் ஆன தாமரை போலும் வடிவும் வனப்பும் உடையதான யவன ஆரியர் பண்ணிய வண்டி" யவனக் கைவினை ஆரியர் புனைந்தது, தமனியத்து இயன்ற தாமரை போல வையம்". (38 : 233 - 234, 239) யவனச்சேரி ஒன்று குறிப்பிடப்படுவதால், யவனர்கள் பெருந்திரளாக வந்து வாழ்ந்திருக்க வேண்டும். "ஐம்பதினிரட்டி யவனச்சேரி” (4 : 1, 8) "பயனறவு அறியா யவனர் இருக்கையும், கலந்தருதிருவின் புலம் பெயர் மாக்கள் கலந்திருந்து உலையும் இலங்குநீர் வரைப்பு (சிலம்பு : 5 : 10 - 12). - தாலமியின் நில நரலும் தென்னிந்தியாவும்: தாலமி, கி. பி. 150 இல் எழுதிய நில நூல் பற்றிய தம்முடைய ஆய்வுக் கட்டுரையில், தமிழ்நாடு பற்றிய விளக்கமான செய்திகளைப் பெரிபுளுஸ் கொடுத்திருப்