பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் - 195 கொண்டு மலையமான் திருமுடிக்காரி ஆண்டுவந்ததைப் போலவும், பாலாற்றங்கரைக் கச்சியைத் தலைநகராகக் கொண்டு திரையன் ஆண்டுவந்ததைப் போலவும், சேயாற்றங்கரைச் செங்கண்மாவைத் தலைநகராகக் கொண்ட மலை நாட்டை நன்னன் சேய் நன்னன் என்பான் ஒரு தமிழ்க் குறுநில மன்னனும், அப்பழந்தமிழர் காலத்தே ஆண்டு. வந்தான். அவன் புகழ்பாடும், பாண்டி நாட்டுப் புலவராம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார், தம்முடைய மலைபடுகடாம் என்ற பாட்டில், அவன் பெயர் "நன்னன் சேய் நன்னன்” என்பதையும் (64), அவன் தலைநகர், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாய், இன்று ஜவ்வாது மலை என அழைக்கப்படும் நவிரம் "பேரிசை நவிரம்” (82) என்பதையும், அவன் நாட்டில் பெருக்கெடுத் தோடும் ஆறு, திரையன் நாட்டுப் பாலாற்றோடு கலந்து ஒடிக் கடலில் விழும் இக்காலை செய்யாறு என அழைக்கப் பெறும் சேயாறு "காணுநர் வயாஅம் கட்சின் சேயாறு" (476); "கடுவரல் கலுழிக் கட்கின் சேயாறு" (555) என்பதையும் அறிவித்துள்ளார். நன்னன் சேய் நன்னன் நாட்டுப் பரப்பின் பெருமையும், வளச் செழுமையும், மக்கள் பண்பாடும், புலவர்க்கு 583 வரிகளைக் கொண்ட ஒரு நெடும்பாட்டைப் பாடத் தேவைப்படுமளவு படர்ந்து, நீண்டு, உயர்ந்து, சிறந்து விளங்கின. & - ஆக, இதுகாறும் எடுத்து வைத்த விரிவான அகச்சான்று களால், கச்சியைத் தலைநகராகக் கொண்ட வேங்கட நாடு வரையான தமிழ் வழங்கிய நாடு, பழந்தமிழர் காலத்தில் தமிழரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே, காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட நாடு, தமிழரசர்களால் ஆளப்படவில்லை, மாறாகச், சமஸ்கிருத ராஜாக்களால் ஆளப்பட்டது என்ற, திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கூற்று, உண்மைக்கு மாறானது என்பது தெளிவாக்கப்பட்டது. - காஞ்சியும், அதைத் தலைநகராகக் கொண்ட நாடும் பழந்தமிழர் காலத்தில், தமிழரசர்களால் ஆளப்படவில்லை.