பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் 309 வதிலும், அதிகமாக இதில் இடம் பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தி லிருந்து வேண்டுமென்றே கடன் வாங்கப் பட்ட சொற்களாவன. "சகடம்" (50), "நாடகம்" (55), "தெய்வம்" (104) "பூதம்" (285), "எந்திரம்" (260), "தருப்பை" (264) மற்றும் "அமுது" (175). இப்பாட்டு, தன் காலச் செய்யுட் படைப்புகளைக் காட்டிலும், ஆரியக் கருத்துகளைத் தங்கு தடையின்றி மேற்கொண்டிருக்கும் அதேநிலையில், ஆரிய இலக்கிய நெறி எதனாலும் ஆட்சி கொளப்பட்டுவிடவில்லை. ஆற்றுப் படைச் செய்யுளுக்கு ஒரு முன்மாதிரியான செய்யுளாகிப், பழந்தமிழ் இலக்கிய மரபுகளை, முழுமையாக மேற்கொண்டு உளது. தமிழகத்தில், ஆரிய நாகரிகத்தின் மையமாகத் திகழ்ந்த காஞ்சியில் பாடப்பட்டு, ஆரியச் செல்வாக்கிற்கான அடிச் சுவட்டினை அளவின்றிக் கொண்டுளது என்றாலும், அது, பழங்காலத்தைச் சேர்ந்த பிற தமிழ்ப் பாக்களைப் போலவே, ஐந்தினை நிலத்து வாழ்க்கை முறைகளையும், அக்காலைத் தமிழ் மக்களின் பழக்கவழக் கங்களையும் விரித்துரைக்கிறது. பெரும்பாணாற்றுப்படைப் பாட்டுடைத் தலைவனான இளந்திரையன், எந்தப் போர்க்கள வெற்றியாலும் புகழ் பெற்றவனல்லன். அவன் வீரம், பெரும்பாணாற்றுப் படைப் போலும் பாக்களின் வழக்கமாதல் போல, மிகைப் படுத்தப்பட்ட வெறும் புகழ் உரைகளாகக் கூறப்பட் டுள்ளனவே யல்லாது, குறிப்பிட்ட போர்க்களத்தில் பெற்ற எந்த ஒரு வெற்றியோ, பிற நாடுகளைக் கைக்கொண்ட எந்த ஒரு வெற்றியோ, அவனுக்கு உரியதாகக் கூறப்படவில்லை. "பகைவர் அரண் மதிலை அழித்து, அப்பகைவரின் மணி முடிகளைக் கைக்கொள்வதல்லது, அவரோடு சமாதானம் செய்துகொள்ள விரும்பான்" என்பது போலும் பொருள் தெளிவில்லாச் சொற்றொடர்கள், பிரெஞ்சு நாட்டில், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் இழந்து நெடுங்காலம் கழிந்த பின்னரும், பிராத்தானிய நாட்டுப் பேரரசர்கள், விடாமல் மேற்கொண்டிருந்த பிரெஞ்சு நாட்டு அரசுரிமைப் பட்டயங்கள் போலவே, பொருள் தெளிவு அற்றனவாம்.