பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் 313 பத்துப்பாட்டின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர், மேலே காட்டிய பாடற்பகுதியில் வரும் "திரைதரு" என்ற தொடருக்குத் தெரிந்த ஒரு கட்டுக் கதைமூலம், அதற்கு விளக்கம் காண முற்பட்டுள்ளார். அவர் கூறியது; "நாகப்பட்டினத்துச் சோழன், பிலத்துவாரத்தால், நாகலோகத்தே சென்று, நாக கன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என் செய்வேன் என்றபொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரச உரிமை எய்துவித்து நாடாட்சி கொடுப்பன், என்று அவன்கூற, அவளும் புதல்வனை அங்கனம் வரவிடத் திரைதருதலின், திரையன் என்று பெயர் பெற்ற கதை கூறினார்," என்பது, முன்பே காட்டியவாறு, திரையர் என்பார், ஒரு பழங்குடியினராதலின், இவ்விளக்கம் பொருந்தாது. (பவத்திரி என்ற நகருக்கு உரியவனும், பொன்னணிகள் பூண்டவனுமாகிய மற்றொரு திரையர் தலைவனும் உள்ளான். "செல்லா நல்லிசைப் பொலம் பூண் திரையன், பல்பூங்கானல் பவத்திரி" - அகம் : 340 : 6:7). ஆயினும், இன்றைய எழுத்தாளர் சிலர், இக்கட்டுக் கதையை, வரலாற்று உண்மையாக ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் இளந்திரையனைப் பிறிதொரு காதல் கட்டுக்கதைக் குழந்தையாக, இந்த இடத்தில், நாகப்பட்டினத்துச் சோழன் மகன் அல்லாமல், வேறு ஒரு காவிரிப்பூம் பட்டினத்துச் சோழன் மகனாகத் திரைவழி மிதந்து வாராமல், கலம் ஏற்றி அனுப்பப்பட்டு, அக்கலம், கடும் சூறாவளியால் தாக்குண்டு மூழ்கிப் போக, அதன் பின்னர், அவன் குறித்து யாதும் . அறியவாராமகனாகக் கொண்டு, அக்கட்டுக் கதையை மேலும் பொருளற்றதாகச் செய்தும் உள்ளனர். இக்கதை மணிமேகலையில் இடம் பெற்றுளது. காவிரிப்பூம், பட்டினத்துச் சோழன், நாகப்பட்டினத்துச் சோழன் போலல்லாமல், தன் மகனைப் பார்த்தும் அறியான் ஆதலின், அவன் தன் மகனுக்கு நேர்ந்து விட்ட கதியைக் காண்பதில் ஈடுபாடு கொண்டுவிட்டது. அக்காலை, வழக்கம்பேர்ல் கொண்டாட வேண்டிய இந்திர விழாவைப் புறக்கணிக்க