பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 - -- தமிழர் வரலாறு ಅಗಿಹiಖ, எத்துணைப் பாவலர்ப் பெரும்புரவலனோ அத்துனைப் பெரும் புலவனாகக் காணப்படுகிறான் கிள்ளிவளவன். அவன் புகழ்பாடிய புலவர், "தேன்போலும் இனிய ஒலி எழுப்பும் நரம்பு தொகுக்கப் பெற்ற சிறிய யாழுக்கு உரியபாண குளத்து வாழ் யாமையைப் பற்றுக் கோலில் கோத்து எடுத்தாற்போல, நுண்ணிய கோலில் பிணிக்கப்பட்ட, தெளிந்த ஓசை எழுப்பும் கண்ணுடைய, பெரிய உடுக்கையின் ஒசை இனிதாக எழுவது காண்க; இவ்விடத்தே சிறிது இளைப்பாறிச் செல்வே மாக என்றெல்லாம் பலப்பல கூறிக் கேள்விமேல் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு நிற்கும், மூத்த, வாய்மையில் வழுவால் இரவலனே! நான் கூறுவது கேட்பாயாக! தைத்திங்களித தண்ணெனக் குளிர்ந்திருக்கும் குளத்து நீர் போலக் கொள்ளக் கொள்ளக் குறைதல் அறியாத பெருஞ்சோற்று மலைய யுடைய பெரியநகரத்தில், சோறு ஆக்கும் நெருப்பல்லது, பகைவர் மூட்டிய நெருப்பினைக் காண்பது இயலாவாறு சோற்றையும், உண்ணிரையும் விளைவிக்கும் அத்தகு நாட்டின் வேந்தனாம் கிள்ளிவளவன் நல்ல புகழை நினைந்து செல்வீராக!" - - - - "தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண ". . கயத்துவாழ் யாமை காழ்கோத்தன்ன், நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கினை, இனிய காண்கு இவண் தணிகெனக் கூறி வினவல் ஆனா முதுவாய் இரவ்ல்! தைஇத் திங்கள் தண்கயம் போலக் . . கொளக் கொளக் குடைபடாக் கூழுடை வியன் நகர் அடு தீ அல்லது சுடுதீ அறியா திருமருந்து விளைக்கும், நன்னாட்டுப் பொருநன் * .. கிள்ளி வளவன் நல்லிசை ೬iran” புறம் : 70 : 1.10 இப்பாட்டின் இறுதியில் ஆளப்பட்டிருக்கும் உவமை, சிறப்பினைக் குறிப்பிடத்தக்கது. என்னால் கான முடிந்த