பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - . 413 இந்த உதியஞ்சேரல், பெருவீரனாகக் காணப்படுகிறான். நற்றினை "உதியஞ்சேரலாதன், கடுஞ்சினம் மிக்குப் புகுந்த, ஒலி அடங்கா அகன்ற போர்க்களத்தில் களம்பாடு ஒர் பாட்டிற்கு ஏற்ப, கருவிஇசை எழுப்புவார், ஆம்பல் என்னும் பண்ழை விரைவாக ஊதுகின்ற புல்லாங்குழல், இனிய இசை எழுப்பினாற் போல" என்ற ஒர் உவமையினைக் கொண்டுளது : - "உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலங் குழலின்" - நற் : 113 : 9 - 11. அகநானூறு, "பிறர் நாடுகளை வென்று, தன் நாட்டின் எல்லையை விரிவாக்கிக்கொண்ட உதியஞ்சேராலாதனைப் பாடிச் சென்ற பரிசிலர், பெரும் பொருள் பெற்று மகிழ்வது போல” என்ற உவமையினைக் கொண்டுளது. "நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல" - அகம் : 65 : 5 - 6. ஆகவே, இவ்வுதியன் பெரியவீரன் ; புலவர்களையும், பிற இரவலர்களையும் மேலும் பெரியவள்ளல். ஆனால் குருக்ஷேத்திரத்தில், போரிட்ட இருதிறப் படையினர்க்கும் உணவு ஆக்கிப் படைக்கும் சமையல்காரனாதல் அரிதிலும் அரிதாம். பெருஞ்சோறு படைத்த காலம் : - இப்புறப்பாட்டிற்கும், அது பாடிய புலவனுக்கும், அப்பாட்டுடைத் தலைவனுக்கும், கி. பி. ஐந்தாம் நூற்றாண் டிற்கும் முற்பட்ட காலத்தை வகுத்தல், பிறிதொரு வகையில் நோக்கிலும் நனி மிகப் பொருத்தமில் செயலாம். அப்பாட்டின் முதல் ஆறுவரிகள், கட்புலனுக்கு உள்ளான இந்நிலவுலகை, சாங்கியத்தத்துவம் எந்த அடிப்படைக்கு