பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 431 ஆகவே, அவனோடு போரிட்ட ஆரியர்கள் கி. பி. ஆறாம் நூற்றாண்டில், காஞ்சியைத் திரும்பப் பெற்றுக் கொண்டதன் பின்னர்த் தம் நாட்டு எல்லையை விரிவாக்க முயன்ற பல்லவர்களாதல் வேண்டும். பிறிதொரு உவமையில், "வெல்லும் வேற்படையினையும், மாரிபோல் சென்று பாயும் அம்புகளையும், மழை மேகம் போலும் தோலால் ஆன கிடுகிளையும் உடைய சோழர்க்கு உரிய, விற்படை மலிந்த காட்டரணைக்கொண்ட வல்லத் துக்குப் புறத்தே உள்ள காவற்காட்டின்கண் நடைபெற்ற போரில், தோற்று உடைந்து ஓடிப் போன ஆரியர் படை போல், என் கைவளை உடையதாக" எனக் கூறப் பட்டுள்ளான். - "வென்வேல், மாரி அம்பின், மழைத்தோல் சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக என் நேரிறை முன்கை வீங்கிய வளையே." - - அகம் : 336 , 19 - 23 ஈண்டுக் குறிப்பிடப்பட்ட ஆரியர்களும் பல்லவர்களே ஆதல் வேண்டும். தன் காவற்காடு தஞ்சையைக் காத்து நின்றதான வல்லம், ஈண்டு முதல் முறையாகக் குறிப்பிடப் பட்டுளது. இவ்விரு இடங்களும், மிகவிரைவில் முறையே முத்தரையர், மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, பிற்காலச் சோழர்களின் தலைநகர்களாக வகுக்கப்பட்டன. மதுரை ஆண்ட ஒரு சிற்றரசன் ஆரியப்படை கடந்த (அல்லது தந்த) நெடுஞ்செழியன் என அழைக்கப் பட்டுள்ளான். இது, பெரும்பாலும், ஆரியர் படைகளை வென்ற நெடுஞ்செழியன் எனப்பொருள் படுவதாகும். ஆனால், ஆரியப்படையொடு அவன் போரிட்டது எங்கும் குறிப்பிடப்படவில்லை ; ஆகவே, அது வெறும் பட்டப் பெயரே ஆதல் வேண்டும். சிலப்பதிகாரம் இரண்டாம்