பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 433 சிறப்பின்பாலால் தாயும் மனம் திரியும்; ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக ! என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் . மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே" - புறம் : 183. வரலாற்று ஆசிரியனுக்கு, இது, வரலாற்றுச் சிறப்பில்லா ஒர் எளியபாடல் : காவல பாவலனாம், இப்பாடலாசிரியர், தமிழ்நாட்டு அரசர்கள், மக்கள் ஆகியோர் உள்ளத்தில், ஆரிய நாகரிகம் நன்கு இடங்கொண்டு விட்டதற்குப் பிற்பட்ட காலத்தே வாழந்தவராவர் என்பதொன்றே, இப்பாடலி விருந்து நாம் உணர்ந்து கொள்ளக் கூடியது. பிராமண இனத்தவர், தாழ்ந்த இனத்தவரிடம் கல்வி கற்பது என்பதிலிருந்து, நாம் யூகிக்கக் கூடியது, பிராமணர்கள், தமிழ்ப்புலவர்களிடமிருந்து, தமிழ் இலக்கிய இலக்கணங் களைக் கற்றதை, இவ்வாசிரியர் ஒரு வேளை குறிப்பிடுகிறார் போலும் என்பதே. இயற்பெயர் அறிய மாட்டாத, கூடகாரம் எனும் இடத்தில் உயிர் நீத்த மாறன் வழுதி என்ற மற்றொரு பாண்டியனும், வடபுலத்து அரசர்களை வாடச்செய்தான் எனக்கூறப் பட்டுளது. "வடபுல மன்னர் வாட அடல் குறித்து இன்னாவெம்போர் இயல் தேர்வமுதி" (புறம் : 52 : 5-6): அவன் வடபுல அரசர்களை வெற்றி கொண்ட போர்க்களம் எது என்பது குறிப்பிடப் படாமையால், இது வெறும் தற்பெருமையேயாம். இவனைப் பாடியபுலவர், ஆரியக் கருத்துகள் பெருமளவில் இடம் பெற்றிருக்கும் மருதக்கலி பாடிய, மருதன் இளநாகனார்ாதலின், இவன் மிகவும் பிற்பட்ட காலத்தவனாதல் வேண்டும். ஈண்டுக் காட்டிய எடுத்துக் காட்டுகள், இனிவரும் பகுதிகளில் ஆராயப்போகும் எடுத்துக் காட்டுகளின்