பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் f 53 கூயி மொழியில் 'கிவ' என்பது ஒரு வினைச் சொல் விகுதி: தஸ்-கிவ என்பது அல்லல் உறுத்துவதற்கு திய-கிவ என்பது சினமூட்டுவதற்கு, வேப-கிவ' என்பது கொல்லுவதற்கு அல்லது மோதுவதற்கு, ‘ஒப-கிவ' என்பது எடுத்துக் கொள்வதற்கு. பண்டி-கிவ' என்பது ஏமாற்றுவதற்கு ஆகிய இவை, பெயர்களோடு "கிவ' என்பதை இணைப்பதால் உருவாகும் கூயி மொழி வினையெச்சங்களுக்கான எடுத்துக்காட்டுகள். 'தஸ்-கிவ' என்பது "தஸ்க்ரீவ என எளிதில் ஆகிவிடும். தஸ்-க்ரீவஹ் ப்ரதாபவான் என்ற சொற் றொடர் அவன் பெருமை அல்லது புகழெல்லாம் பிறரைத் துன்புறுத்துவதே என்பதை அறிவுறுத்துகிறது. இராவணன் தோள்மீது பத்துத்தலைகளை வைக்கும் பொருள் கோளினும், இப்பொருள்கோள், இராவணன் இயல்போடு மிகவும் பொருந்துவதாம். - I சேர, சோழ, பாண்டிய அரசுகள், இராவணன் ஆட்சி அழிவின் விளைவாகப் பெரும்பாலும் இராமாயண காலத்திற்குப் பின்னரே தோன்றியிருக்க வேண்டும்? (மறுப்பு தமிழர் வரலாற்று நூலாசிரியர், திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கொண்ட முடிவு இது. The three arcient powers of sola, sera, pandya rose, probably, as a result of the extinction of Ravana's rule, after the age of Ramayana". (History of the Tamils; (Page : 54) grant gyaṁ sa pj6igi Giraširen. இதே கருத்துப்பட வேறு சில இடங்களிலும் அவர் பின்வருமாறு கூறியுள்ளார். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று பெரும் அரச இனங்களின் தோற்றம், தென்னிந்தியா, இராமனால் அமைதிப்படுத்தியதன் அரசியல் விளைவே என நாம் யூகிக்கலாம். இம் மூன்று பெயர்களும் இராமா யணத்தில் இடம் பெற்றிருந்தாலும், புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று இராவணன்களின் ஆட்சிக் காலத்தில், அச் சேர, சோழ, பாண்டிய அரச இனங்கள்