பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும் தென் இந்தியாவும்

99


தெளிவு. மேலும், வால்மீகி தம்முடைய இராமாயணத்தில் பாண்டியரைப் பெயர் கூறிக் குறிப்பிடவில்லை என்பதும் உண்மை அன்று. மாறாக, இராமாயணம் கிஷ்கிந்தா, காண்டத்தில், இரண்டு சுலோகங்களில் பாண்டி நாட்டைப் பெயர் சுட்டியே கூறியுள்ளார்.

தென்திக்கில் அனுமாரை அனுப்புவது என்ற 41வது சருக்கத்தில், சீதையைத் தேடவேண்டிய நாடுகளின் பட்டியலைக் கூறும் சுக்கிரீவன், விதர்ப்பம் தொடங்கிப் பல்வேறு நாடுகளைக் குறிப்பிட்டுவிட்டு இறுதியாக கேரள தேசங்களையும், சோள தேசங்களையும் உள்ளிட்ட பாண்டிய நாடுகளையும் எல்லாவற்றையும் கவனமாய்த் தேடிப் பாருங்கள்' என ஆறாவது சுலோகத்திலும், கடக்க வேண்டிய கடலைக் குறிப்பிடும்போது, அதற்கு முன்பாக, பொன்மயமானதும் , அழகானதும் ஏற்றதும், முத்துக்களாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பெற்றதுமான, பாண்டிய நாடுகளின் உட் புகு வாயில் கதவுகளைக் காண்பீர்கள் எனப்பதில் மூன்றாவது சுலோகத்திலும் கூறியிருப்பது காண்க.

அதுமட்டுமன்று; இ ரா ம ய ண ப் போர் முடித்துச் சீதையைச் சிறை மீட்டு விமானம் மூலம் அயோத்தி திரும்பும் இராமன், இடைவழியில் உள்ள இடங்களைச் சீதைக்குக் காட்டியது கூறும் , யுத்த காண்டம், இரண்டாம் பகுதி, 126 வது சருக்கத்தில், தடங்கண்ணாய்! உன் காரணமாய், நீர் நிறைந்த பெருங்கடலில் கட்டுவதற்கு அரிய நளசேது என்ற இந்த அணை, என்னால் கட்டப்பட்டது' எனச் சேதுவைக் காட்டிவிட்டு, அடுத்ததான 16 வது சுலோகத்தில் "கரையில்லாததும், முழங்குவதும், சங்குகளாலும், முத்துச் சிப்பிகளாலும் நிறைந்ததுமான இச்சமுத்திரத்தைப் பாராய்" எனப் பாண்டி நாட்டுக் கடல் எனப் பெயரால் இல்லை. எனினும், அப்பாண்டிக் கடற்கரைக்கே’’ உரிய செல்வமான, முத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார் என்றும் கூறியுள்ளார்.வால்மீகி.