உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடஇந்தியாவும் .. கி. மு. 1000 .. 500 வரை 203 தாம் உறுதியாக ; மேலும், பாணினி, எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல பெருமை சார்ந்த, முழுமையான பல்பொருள் அறிவு நிரம்பியவராயின், தங்களுடைய வார்த்திகத்திலும். மகாபாஷ்யத்திலும், பாணினியின் இலக்கணக் கொள்கைகளை, மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை, முறையே: காத்தியாயனர்க்கும், பதஞ்சலிக்கும் நேர்ந்திருக்காது.

ஜாதகா கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும்:

பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதி சத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதைகளின் தொகுப்பாகிய ஜாதகா கட்டுக்கதைகள் என்ற நூல், வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு. முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தர்மவிரோத பெளத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி. மு. நான்காம். நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை, புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே நாட்டுப் புறக் கட்டுக்கதைகளாக இருந்திருக்க வேண்டும். அக்கதை களில் ஒரு சில, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து, அக்காலத்திற்கு முன்னரும் பின்னரும். போலவே, நெருக்கமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன. அக்கதைகள், தம் இனத்தைத் தாமே கொன்று: தின்னுபவராக நம்பப்படும் பழங்குடியினர் என்றும் பெண் பூதங்கள் என்றும் அழைக்கப்படும் "யக்கினிஸ்" கள் "ஸ்ரிஸ்வத்து" நகரில் வாழும் "தம்பபண்ணி" தீபத்தோடு (இலங்கை) நடைபெற்ற வணிகர்களின் கடற் பிரயாணங்கள் பற்றிப் பேசுகின்றன. அவ்விடத்திற்கு அண்மையில் வணிகர்களின் கலங்கள் உடைந்துவிடும்போது, யக்கினிஸ் என்ற அவர்கள். அவ்வணிகர்களுக்கு உணவும், மதுவும் அளித்து அவரைக் காத்து மணந்துகொள்வதும் செய்து, இறுதியில் அவர்களை இன்றுவிடுவதும் செய்வர். இந்த யக்கினிக்கள். இரைதேடி, கல்யாணி ஆறு முதல் நாகதீபம் வரை கடற்கரை மில் அலைந்து திரிவர். (IValahassa Jataka No. 196)