பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

தமிழர் வரலாறு

விளக்கம் முழுக்க முழுக்கப் பிழைபட்டது. மதுரைக்காஞ்சி, அகத்தியனாரைக் குறிப்பிடவேயில்லை,

சிலப்பதிகாரம், பழைய தமிழ்ப் புராணக் கதைகளும், ஆரியப் புராணக் கதைகளும், பழைய தமிழ்ப் பழக்க வழக்கங்களும், ஆரியப் பழக்கவழக்கங்களும், வேறு பிரித்துக் காணாவாறு, ஒரே இனத்தைச் சேர்ந்த பிழம்பு வடிவமாக வடிக்கப்பட வில்லையாயினும், ஒன்றோடொன்று கலக்கத் தொடங்கிவிட்ட, கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாட்டு, இந்தப் பாட்டும், தமிழை முதன்முதலில் தோற்றுவித்து, மக்களுக்குக் கற்பித்ததாகக் கூறும் அகத்தியப் புராணத்தின் மூலத்தைக் காணப் பேரிய அளவில் துணை புரியவில்லை. இது, இந்திரன் மகன் சயந்த குமரன், வானுலக ஆடல் மகள் உருப்பசி, ஆகியோரை, அகத்தியர் சபித்ததைக் கூறுவதோடு, அகத்தியர் குறித்த வேறு ஒரு குறிப்பையும் தருகிறது. அது, மாடலன் என்ற பார்ப்பன யாத்திரிகன் குமரியில் நீராடச் செல்வதன் முன், அகத்தியர் இருந்த மலையை வலங் கொண்டதைக் கூறுகிறது.

"தெய்வ மால்வரைத் திரு முனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர்"'.
-சிலம்பு : அரங்கேற்று காதை : 1-4
'மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து".
- சிலம்பு : அடைக்கலக்காதை 13-15,

அடுத்த பெருங்காப்பியமாகிய மணிமேகலை, மேலே கூறிய காப்பியமாம் சிலப்பதிகாரக் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படினும், அது, பழைய தமிழிலக்கிய மரபுகள்