பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

தமிழர் வரலாறு

சார்த்திய கணை துஞ்சு வியன் நகர் ' 121) சிறிதும் தயக்கமில்லாமல், தமிழ் "வில்" என்ற சொல் இடம் பெற வேண்டிய இடத்தில், சமஸ்கிருதச் சொல்லாம் . "சாபம்" என்பதை வேண்டுமென்றே ஆண்டுள்ளார். ("வெறிகொள் சாபத்து எறிகணை" நற்றிணை : 228 : 7)] இவன், கடைச்சங்கத்தின் முதற் புரவலனு மாதலின், மேற்கூறிய முடிவிற்கு, முறையான ஒரு தடை எழுப்பவும் கூடும். ஆனால், தொல்காப்பியனாரின் ஒருதலை மாணவராகிய காரணத்தால், உறுதியாக இடைச் சங்கத்திற்கு உரியவரான பனம்பாரனார், குறுந்தொகை 52 ஆம் செய்யுளின் ஆசிரியராவர் என்பதற்கு , அத்தகைய தடை பொருந்தாது.

 அவர் கூறியவாறு, முதல் இரு சங்கங்களைச் சார்ந் புலவர்கள் பாடிய பாக்களையும் இத்தொகை நூல்கள் கொண்டிருக்கும்போது, அத்தொகை நூல்களைக் கண்முன் வைத்துக்கொண்டே, இவையெல்லாம் கடைச்சங்கப் புலவர்களால் பாடப்பட்டன எனக் கூறுவாரேயானால், அவ்வகப் பொருள் உரையாசிரியர், அறவே நம்பிக்கைக்கு உரியரல்லாதவர் என்ற முடிவிற்கு நாம் வரவேண்டியவராகிறோம்; (தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியரால், தலைச்சங்கப் புலவர்களாக மதிக்கப்பட்ட வான்மீகியார், மார்க்கண்டேயனார், கெளதமனார் ஆகிய மூவர் பாடிய பாடல்களாக, 358, 365, 366 எண் பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. (இப்பொருள் பற்றிய, திரு. மு. ராகவ அய்யங்கார் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையினை, செந்தமிழ் : 3 : 9 : பக்கம் : 303-312 ல் காண்க) இவர்கள் பழங்காலப் புலவர்கள் அல்லர் என்ற கருத்துடையவன் நான். ஸ்ரீராமர்காலத்தவராய வால்மீகியும், இவரும் ஒருவர் என நம்பப்பட்டமையால், வால்மீகியார் பழம் புலவராகக் கருதப்பட்டார். அதுபோலவே, மார்க் கண்டேயனாரும், என்றும் சிரஞ்சீவியாகிய மார்க்கண்டனும் ஒருவராகக் கருதப்பட்டனர். கெளதமனார் செய்யுளில், பாண்டவருள் மூத்தனவாகிய தர்மபுத்திரன் என்பவன் பெயரின் தமிழ் மொழி பெயர்ப்புச் சொல் வடிவமாம்