பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

365

முடிவுரை :

நீண்ட இவ் விவாதத்தின் முடிவுகளைத் தொகுத்துத், தருகின்றேன்.

1. தமிழ்ச் செய்யுள், அதற்கும் முந்தி இல்லை என்றாலும், கி. மு. 1000 அளவில் எழுந்தது; முதல் ஆயிரத்தாண்டைச் சேர்ந்தனவும் அகத்தியனார், தொல்காப்பியனார் மற்றும் பிற பழைய இலக்கண ஆசிரியர்கள் தங்கள் இலக்கண நூல்களுக்கு அடிப்படையாகக் கொண்டனவுமாய இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களும் அழிந்துவிட்டன. என்றாலும் அப்பாடல்கள் எல்லாம் தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும், காதல், போர் நிகழ்ச்சிகள் பற்றி, அவ்வப்போது, பாடப்பெற்ற சிறப்புப் பாடல்கள்களாம். என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

2. புலவர்கள், பாண்டிய அரசவையில் மட்டுமல்லாமல், சோழ, சேர அரசவைகளிலும், அரசர்களின் அருட்பேரொளியின் கீழ்ச் சிறப்புற வாழ்ந்திருந்தனர். தம் புகழ்பாடும் பாணர் முதலாம் இரவலர்க்கும், அவர்தம் சுற்றத்தினர்க்கும், இறைச்சியொடு கலந்த உணவும், இனிய மதுவும் வழங்குவதில், அரசர்கள், தாராளமாக இருந்தனர்.

3. பாண்டிய மன்னர்கள், ஒன்றையடுத்து ஒன்றாக மூன்று தலைநகர்களைக் கொண்டிருந்தனர். அதனால்தான் முச்சங்கங்கள் பற்றிய கட்டுக்கதை எழுத்தது.

4. சங்கங்களின் கால நீட்சிக்குக் கூறும் புலவர்களின் எண்ணிக்கையும் பொருத்தமற்ற கண்டுபிடிப்புகளாம்.

5. தமிழ்ச்சங்கம், கி.பி. 470இல் வஜ்ஜிர நந்தி என்பவரால் நிறுவப்பட்ட திராவிட சங்கத்தின் மாதிரியில், ஒரு சமயப் பேரவையாக, முதன் முதலில் எண்ணி உருவாக்கப்படடது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்களில், சிவன் புகழ், கூறும் பாடல்களைப் பாடிய ஒரு சிலர், கட்டுக்கதை கூறுமாறு, சிவபெருமானின் அடிக்கடி வருகைதரவால் சிறப்புப் பெற்று