பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

483

..........................
முழங்கு கடல் முசுறி' -புறநானூறு 343 : 3-10

உரோம வீரர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்ற குடியினராய், தமிழரசர்களின் மெய்க் காவலர்களாய்ப் பணி புரிந்து வந்தனர். அவர்கள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளனர். “இயல்பாகவே வலிகூடி, முறுக்கேறிய உடலும், அதற்கேற்பப் படைக்கஞ்சாப் பேராண்மையும் வாய்ந்த யவனர், குதிரைகளை விரைந்தோட்டவல்ல, சவுக்கை, இடையில் சுற்றிக் கொண்டு, அது புடைத்துக் காணுமாறு அதன்மேல், மகளிராடையாம் சேலை போலும் நீண்ட உடையை இடைச் சுற்றளவே இருக்குமாறு, மடித்து மடித்துப் பாவாடைபோல் சுருக்கித் தைத்து உடுத்துக்கொண்டு, அதன் மேல், மெய்ம்மறைய சட்டையும் அணிந்து, கண்ட அளவே அச்சம் ஊட்டும் தோற்றம் உடைய யவனர்” என்கிறது. அப்பாட்டு.

“மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவணர்”
-முல்லைப்பாட்டு : 59-61.

ஆகவே அவர்கள் அரண்மனைகளின் வாயில் காப்போராகவும் பணிபுரிந்தனர். “இயல்பாகவே அகன்று உயர்ந்து காவல் உடையதான மதில் வாயிலைக் காத்து நிற்கும் காவல் தொழிலில் சிறந்த, பகைவரைத் தப்பாது கொல்லும் வாளை ஏந்திய யவனர்” என்கிறது சிலப்பதிகாரம்.

“கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல் வாள் யவனர்” – சிலப்பதிகாரம் : 14 : 66-67


தென்னிந்தியாவில் ரோமர் இராணுவப் பொறிகள்


வணிகர்கள், வீரர்கள் மட்டுமல்லாமல், எண்ணற்ற உரோமப் பொறியாளர்களும், கைவினைஞர்களும் தமிழ்