பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528

தமிழர் வரலாறு

பாடலி வரையான, சீர் மிகு, சீர்கெட்ட" நெடுஞ்சாலைகளில் செல்லும் மாடுபூட்டிய கட்டை வண்டிகளாம் வணிகக் சாத்துக்கள் மூலம், பெரிய வணிகப்போக்குவரத்து நடை பெற்று வந்தது என்றும் கூறியுள்ளார் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் (தமிழர் வரலாறு : பக்கம் : 141 - 142 காண்க).

கி. மு. நான்காம் நூற்றாண்டின் நிலை, கடைச்சங்க காலத்தில் பெருகியிருக்குமே அல்லது, குறைந்திருக்காது; பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களை ஒருமுறை. படிப்பவர்க்கும். பழந்தமிழகத்தில் பேரூர்களையும், சிற்றூர்களையும் இணைக்கும் பெருஞ்சாலைகள். தமிழ் நாடெங்கும் இடம் பெற்றிருந்தன என்பதும், அப்பெருஞ் சாலைகள் இரு மருங்கிலும், நெடுகிலும், சிற்றூர்களும் பேரூர்களும் இடம் பெற்றிருந்தன என்பதும் தெற்றெனப் புலனாம்.

தொண்டைமான் இளந்திரையனைக் காணச் செல்லும் பெரும்பாணனுக்குச் செல்லும் வழியினைக் காட்டுவதாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றும் படையில், அரசுக்கு வரவேண்டிய வரியினைத் தண்டுவோர், விற்படையோடு வழிநெடுக வீற்றிருக்கும் காவல் நிலையங்களையும் (80 - 82) அதனால், வழிச்செல்லுவார், கொண்டு செல்லும் பொருட்களைக் கொள்ளை கொண்டு ஓடிவிடும் கொடியோர் இல்லா வழிநலத்தையும் (39 - 41) உமணர், உப்புப் பொதி ஏற்றிய வண்டிகளின் பெருஞ்சாத்துத் தொடர்ந்து சென்றுகொண்டே இருப்பதால், பெருவழிகள், ! இரவிடைச்செல்வார்க்கும் ஏமமாக அமைவதையும் (60 - 66) வழிப்போவார்தம் வயிற்றுப்பசி தீர்த், தேக்கிலையில் உணவு படைக்கும், ஈத்திலை வேய்ந்த குடியிருப்புக்களைக் கொண்ட சிற்றூர்களையும் (88-105) செல்லும் வழி நெடுகிலும், செவ்வரிசிச் சோற்றினை வழங்கும் எயினர் காட்டரண்களையும் (121-133) பசுந்தினை அரிசிச் சோற்றைப் பாலுடன் கலந்து பருகப்பண்ணிப் பசி தீர்க்கும் கோவலர் குடியிருப்புக்களையும் (166-1 68) அவரைப் பருப்பு கலந்து