பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தமிழர் வரலாறு

முதலாம் தெய்வங்கட்கு, அகத்தும், புறத்தும் அழுக்கற்றுத் துாய்மையுடையராய், மாற்றுதற்கரிய இயல்பினதான உயர்ந்த பலிகளைக் கொடுத்து வழிபடுவதற்கு, அந்திப் போதில், விழாக்குறித்து இசைக்கருவிகள் முழங்கும்."

"நீரும், நிலனும், தீயும், வளியும்
மாக வீசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக,
மாசற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர்
வாடாப்பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயர் பலி கொடுமார்

அந்தி விழவின் துரியம் கறங்க"
-மதுரைக்காஞ்சி : 453-460.

அவ்விளக்கம், இன்றைய நடைமுறையில் இருக்கும், எந்த வழிபாட்டு முறையோடும் இனம்கான மாட்டா அளவு, தெளிவற்றதாக அமைந்துளது. உறுதியாக வரையறுக்கப்பட்ட, பிற்காலத்திய வழிபாட்டு நெறி எதனோடும், இனம் காட்டமாட்டா அளவு, வழிபாட்டு முறையும், பெரும்பாலும் நெகிழ்ச்சி உடையதாகவே அமைந்துளது.

இதுவல்லாமல், விஷ்ணு வழிபாடும் இடம்பெற்றிருந்தது. பேரொளி வீசும் சிறந்த அணிகலன்களையுடைய, அறிவு தன்மை வாய்ந்த சிறு பிள்ளைகள், கூட்டத்தில் பிரிந்து போய்விடாவாறு காத்தற்பொருட்டுத், தம் கைகளால், இறுக அணைத்து, அவர் மேல் கொண்ட அன்புப் பெருக்கால் ஆரத் தழுவிக் கொண்டு, மகரந்தம் செறிந்த, தாமரை மலரைப் பற்றினாற் போன்று, அப்பிள்ளைகளின் கைகளைத், தம் கைகளால் பற்றிக் கொண்டு, தாமும் அவரும் ஓரிடத்தே இருக்க, கண்டார் விரும்பும் அழகு வாய்ந்த பேரிளம் பெண்டிர், வழிபாட்டுக்கு வேண்டும், பூவும், புகையும்