பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் புறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

227


அடிக்குறிப்பு :

தொல்காப்பியத்தில், "ஓரை" என்ற சொல் ஆளப்பட்டிருப்பது கொண்டு, அது, கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்திலேயே எழுதப்பட்டதாகும் (தமிழர் வரலாறு : பக்கம் 70) எனக்கூறும். திருவாளர் அய்யங்கார் அவர்களின் முடிவு தவறாது என்பது, மொழிபெயர்ப்பு ஆசிரியரின் "தொல்காப்பியர் காலம்" என்ற தலைப்பில் விரிவாக ஆராயப்பட்டுளது.

வானநூல் அறிவும், கணித நூல் அறிவும், இந்துக்களைச் சார்ந்த கிரேக்கர்களாம் யவனர்கள், காந்தாரத்திலும், சிந்துவெளிப் பள்ளத்தாக்கிலும், தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொண்ட பின்னர், கி. மு. 200க்கும், கி.பி. 400க்கும் இடையில் வடஇந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு அக்காலத்தித்குப் பின்னரே, தமிழ் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது ; ஆகவே, வானகோள்கள் பற்றிக் குறிப்பிடும் அகப்புறப் பாடல்களைப் பாடிய புலவர்களும், அப்பாக்களின் பாட்டுடைத் தவைர்களாம் அரசர்களும், கி. பி. 400க்கும் பிற்பட்ட காலத்தவராவர் எனக்கூறும், திருவாளர் அய்யங்கார் அவர்களின் இம்முடிவும், சரியான முடிவு அன்று என்பதற்கு வேறு காரணங்கள் காட்டத் தேவை இல்லை. தொல்காப்பியர் காலம் குறித்து அய்யங்கார் அவர்களின் முடிவை மறுத்ததற்குக் காட்டிய காரணங்களே போதும், ஆண்டுக் கண்டு கொள்க:

வெள்ளி, தென் திசை நோக்கிச் செல்வது, வர இருக்கும் கேட்டினை அறிவிக்கும் அறிகுறி என்பது, பட்டினப்பாலையிலும் கூறப்பட்டுளது. ["வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும்"-1-2.]

இவையெல்லாம், வர இருக்கும் கேட்டின் அறிகுறிகள், திங்கள் ஒளி மறைப்பு, திங்களைப் பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்ற விளக்கம் பின்வரும் தொடர்களில் இடம்