பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

296

தமிழர் வரலாறு

பெரிய தேர்ப்படைகளைக் கொண்ட மோரியர் என்ற கங்கைக் கரைப் பேரரசராம் மோரியர், தம் தேர்ப்படை இனிதே செல்ல, இடையில் தடையாக இருந்த மலைகளையெல்லாம் வெட்டி வழிசெய்து கொண்டு, தமிழகத்துள் புகுந்து விட்டாராகத், தன் கோசர் படைத்துணையோடு அவர்களை வெற்றிகொண்டு, தன் மோகூரைத் தாண்டி அப்பாற் செல்லாவாறு துரத்திவிட்ட அருஞ்செயலை மாமூலனார் பாராட்டியுள்ளார்.

“கோசர்
தொன் மூ தாலத்து அரும்பனைப் பொதியில்
இன்னிசை முரசும் கடுப்பு இகுத்து இரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின் பகை தலைவந்த
மாகெழு தானை வம்ப மோரியர்”
- அகம் : 251

ஆக, நக்கீரரும், பரணரும் பாடிய மோகூர்ப் பழையனும், அவனைப்பாடிய மாமூலனாரும், அம் முதுபெரும் புலவர்களும், அப்புலவர் பெரு மக்களால் பாடப்பெற்ற நெடுஞ்செழியன், செங்குட்டுவன் போலும் மூவேந்தர்களும் வாழ்ந்த காலத்தவரே அல்லது, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட காலத்தவர் அல்லர்.

ஆக, மாமூலனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப்பட்ட காலத்தவர் என்பதற்குத், திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் காட்டிய இரண்டாவது காரணமாம், மாமூலனார் பாடிய எண்ணற்ற குறுநிலத் தலைவர்கள் எல்லாம், வந்தர் ஆட்சி மறைவுக்குப் பின்னர், அதாவது கி. பி. தாம் நூற்றாண்டிற்குப் பின்னர், தமிழகத்தின் பல்வேறு திகளைக் கைப்பற்றிக் கொண்டு அரசோச்சத் தொடங்கியவர்களாவர் என்ற வாதத்தில் வலுவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகிவிட்டது.