பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல்

311

களாலும் நிறைந்ததும், தாமரை, அல்லி மலர்களால் முழுதும் மறைவுண்ட நீர் நிலைகளால் ஒளி பெற்றதும், காவிரி பாய்வதால் மண் வளம்பெற்றுத் தூய்மை பெற்றதும், வளம் கொழித்து, ஒரு நகரின் தேவை அனைத்தையும் கொண்டதுமாகிய, குழப்பம் இன்றி, அமைதிநிலவும் யூத மங்கலம் என்ற பெருநகரில், நன்கு கட்டப்பெற்ற, வெளிப்புறச்சுவர் அகழ்களால் வெனுதாசன் என்பானுக்கு உரியதும், ஆற்றங்கரையில் வ ரி சை யா க வளர்க்கப்பட்ட வாநீர மரங்களால் சிறப்புற்றதும், பல்வேறு இனப்பறவைகளைக் கொண்டு, மக்கள் உள்ளங்களுக்குக் களிப்பூட்டுவதும், இனிய தாமரை மலர்களால் முழுமையாக மூடப்பெற்ற குளங்களால் அழகு பெற்றதும், இனிய நீரால் நிறைந்த சிறந்த கிணறுகளால் சிறப்புற்றதும், பரந்து அகன்ற வான் சுதை திட்டப்பெற்று ஒளி பெற்ற எண்ணிலா வீடுகளைக் கொண்டதும், கைலைமலை முகடுகளை வெற்றி கொண்டு எள்ளி நகையாடும் உயர்வுடையதும், கூதிர்ப்பருவத்து வான் முகில் போலும் ஒளியுடையதுமான கோபுரங்களால் பிளவுண்ட மண் உடையதும் ஆகிய தவப்பள்ளியில் மக்கள் உள்ளத்தை ஐயத்தின் நீங்கித் தெளிவு பெறச் செய்யும் ஒரு மாளிகையில் வாழ்ந்திருந்த என்னால் என் மாணவர்களின் நலம் கருதியும், வினயம் என்ற நூலைக் குறுகிய காலத்தில் எளிதில் கற்றுக்கொள்ள விருப்பும் பிக்குகளின் ஒற்றுமைக்காகவும், புத்த சிம்மர் போதித்த கொள்கைகளையொட்டி, இத்தொகுப்பு நூல், புத்த சிம்மரைப் பெருமை செய்வான் வேண்டி, தொகுக்கப் பெற்றது." இது, களப்பிரர் குலத்தைச் சேர்ந்த, குற்றத்தின் நீங்கிய, அச்சுத விகண்டன் காலத்தில் தொடங்கப் பெற்று முடிக்கப் பெற்றது.

செட்டஹஸ்ஸ சொளரத் ஹஸ்ள நாப்ஹிழ்தெ

நிராகுலெ

சப்பஸ்ஸ் பன லொகஸ்ள காமெ சம்பிண்டிதெ விய
கடலிசா தாலுச்சுனா லிகெரவனாகுலெ
கமலுப்பலசஞ்சன்ன சலிலாசய சொய்ஹறிதெ