பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

345

கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருத்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி, வெருவர
வென்றுஅடு விறற்களம் பாடித், தோள்பெயரா

நினம்தின் வாயள் துணங்கை துரங்க."
-முருகு : 47 - 56

பாம்புகள் இறந்து போகுமாறு அடிக்கும் பலவரிகளைக் கொண்ட வளைந்த சிறகையுடைய கருடனைக் கொண்ட கொடியோனாகிய திருமால், வெண்ணிற ஆனேற்றை வலந்தரு வெற்றிக் கொடியாக உயர்த்திய, பலராலும் புகழப்படும் திண்ணிய தோள்களையுடைய, உமையம்மை விரும்பி இடங்கொண்டிருக்கும் இமையாக்கண்கள் மூன்று உடைய, முப்புரத்தை எரித்து அழித்த ஆற்றல் மிகு செல்வனாம் சிவன், ஆயிரம் கண்களையும் நூறு எனச் சொல்லப்படுவது போலும் பல வேள்விகளைச் செய்தமையால் பெற்ற வீறுடைய பகைவர்களைக் கொன்று அழிக்கும் வெற்றியையும் உடையவனாய், நான்கு கொம்புகளையும், அழகிய நடையினையும், நிலம் அளவும் நீண்டு வ ளை யு ம் கையினையும், நூலோரால் உயர்த்திக் கூறத்தக்க நல்ல இலக்கணத்தையும் உடைய யானைமீது அமர்ந்துவரும் திருவுடையோனாகிய இந்திரன், பிரமன், திருமால், உருத்திரன், ஆகிய இ த் தெ ய் வ ங் க ள், வணங்கத் தக்கவனாகவும் முருகன் விளங்கினான்." அவர்கள், அவனைத் திருவாவினன் குடியில் வந்து வழிபட்டன்ர். இறுதியில் விளக்கிக் கூறப்பட்ட கடவுள், உரையாசிரியரால், முதலில் கூறப்பட்ட கடவுளாகவே விளக்கப்பட்டுளது. இறுதி வரியில் கூறப்பட்டிருக்கும் நான்கு கடவுள்கள், இந்திரன், யமன், வருணன் மற்றும் சோமனாகக் கூறப்பட்டுளது. இவ்விளக்கம் வலிந்து கொள்ளப்பட்ட ஒன்று; இது தவிர்த்து, வேறு கூ விரும்பவில்லை.

"பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்,

புள்அணி நீள்கொடிச் செல்வனும், வெள்ஏறு