பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

355


அது என்ன பயனைக் கொடுக்கிறது ? அது போலத்தான் ஆராய்ந்து நோக்கின் உன் மகளும், அவளை மணந்தானுக்குப் பயன்படுவதல்லது உனக்குப் பயன்படாள். நரம்பு ஏழினின்றும் எழும் இனிய ஏழிசை, அதைப்பாடுவார்க்கும், கேட்பார்க்கும் பயன்படுவதல்லது, யாழில் பிறந்ததாயினும் அந்த யாழுக்கு அதனால் பயன் உண்டோ ? அதுபோலத் தான் ஆராய்ந்து நோக்கின், உன் மகள், அவளை மணப்பானுக்குப் பயன்படுவதல்லது உனக்குப் பயன்படாள்.

"பலவுறு கறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலை யுளே பிறப்பினும் மலைக்கு அவைதான் என்

செய்யும்?

நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே:
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும் ?
தேருங்கால் நும்மகள் துமக்கும் ஆங்கு அனையளே,
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே."
-பாலைக்கலி: 8 : 12 - 20;

மற்றும் ஓர் எடுத்துக் காட்டு இதோ : கணவன் மாரால், தோளின் நலம் நுகரப்பட்டுப் பின்னர்க் கைவிடப்பட்ட மகளிர், நீர் வேட்கை உற்ற போது கோலித் தண்ணிர் குடிக்கப் பட்டபின்னர் வீசி எறியப்பட்ட எச்சில்பட்ட குடையோலைக்கு ஒப்பாவர். முதலில் மணம் விருப்பிக் கணவன் மாரால், நலம் நுகரப்பட்டுப் பின்னர் அவரால் கைவிடப்பட்ட மகளிர், வாழ்வோர் போய்விட்ட பாழுருக்கு, ஒப்பாவர். மனம் விரும்பிக் கூடின கணவரால், குணநலமெல்லாம் நுகரப்பட்டுப் பின்னர் அவரால் கைவிடப்பட்ட மகளிர், கூந்தலில் சூடிக்கழிந்த வாடிய மலர்க்கு ஒப்பாவர்.