பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 27

                        "செவ்வேள்  
                         வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் 
                         குழல் அகவ, யாழ் முரல, 
                         முழவு அதிர, முரசு இயம்ப, 
                         விழவு அறா வியல் ஆவணம்"
                                                 -பட்டினப்பாலை : 1.54 - 158

இக்கால அளவில், முருகன், மலைநாடாம் குறிஞ்சியிலிருந்து, ஆற்றுப்பள்ளமாம் மருதத்துக்குக் குடிபெயர்ந்து விட்டான்: களத்தில் உயிர் நீத்துக் கடவுளாகிவிட்ட வீரர்களை அவர் நினைவாக நடப்படும் நடுகல்லில் இடம் கொளச் செய்து, அவர் கையாண்ட வேலையும் கேடயத்தையும் உடன் வைத்து வழிபடுவதும் தொடர்ந்து நடைபெற்றது.

                        “கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
                         நடுகல்லின் அரண்போல’’ 
                                               -பட்டினப்பாலை : 78 - 79.

அதுபோலவே, முன்னரே கூறியவாறு, சுறாமீன் கொம்புருவில் கடற்கடவுள் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றது. கம்ப” வடிவின் கடவுளும் வழிபடப்பட்டது. இது, போரில் சிறை. பிடித்துக் கொண்டுவரப்பட்ட பகையரசர்களின் மனைவிமார்கள், ஊரரர் நீர் உண்ணும் நீர்த்துறையில் நீராடி எழுந்து, அந்திப் போதில், மெழுகித் தூய்மை செய்து, அவியாத விளக்கேற்றிவைத்து, மலர்தூவி அணி செய்த, பலரும் வந்து தொழ. ஊர்ப் பொதுவிடத்தே நடப்பட்ட லிங்கமாதல் கூடும்.

                        ‘கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி,
                         அந்தி மாட்டிய நந்தா விளக்கின் 
                         மலரணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழு 
                         வம்பலர் சேக்கும் கந்துடை பொதியில்
                                                     -பட்டினப்பாலை : 246