பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 தமிழர் வரலாறு,

இக்கம்பம், கந்து என அழைக்கப்பட்டது. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயலில் (33), கடவுள் வாழ்த்துக்குரிய ஒன்றாகக் கூறப்படும் ‘கந்தழி' பெரும் பாலும் இக்கந்தின்மாற்றுருவமாகும். ஆனால், உரையாசிரியர் நச்சினார்க்கினியர், கந்தழி என்பது, ‘ஒரு பற்றுக் கோடின்றி அதுவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்’ என்று கூறியுள்ளார். இக்கருத்தால் உணரப்படும், கடவுள் நிலையில், மிக உயர்ந்த நிலையாம் அருவமாம் நிலை, .பழந்தமிழ்ப் பாக்கள் எதிலும் இடம் பெறவில்லையாதலாலும், அத்தகைய வாழ்த்துப் பாவிற்கான எடுத்துக் காட்டு. ஒன்றுகூட, அவரால் காட்ட இயலாத அளவு, உருவம் அற்று அருவமாம் ஒன்றைப் பாடி வழிபடும் கொள்கை, உண்மையான பழந்தமிழ்க் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது ஆதலாலும், அவர் விளக்கம் அறவே, ஒப்புக்கொள்ளத் தக்கதன்று. -

எரி ஒம்பல் நெறிக்குக் கரிகாலன் ஆதரவு :

    கரிகாலன், தன்னுடைய புதிய தலைநகரில், ஆரிய நாகரீகத்தோடு கொண்டுவிட்ட நெருக்கமான தொடர்பின் விளைவு, அவனுடைய கற்பனை வளமெல்லாம், பிராமணர்களால் செய்து காட்டப்பட்ட ஒளிமயமான எரியோம்பல் நெறிகளால் கவரப்பட்டு, அவன், பொருட்செலவுமிக்க வேதயக்ஞங்களைப் பொருள் அளித்துப் பேணிக்காத்த முதல் தமிழரசன் ஆயினன்: தமிழ்நாட்டில் செய்துகாட்டப்பட்ட மிகப் பெரிய ஸ்ரார்த்தச் சடங்கு முறையின் மிகப் பழைய விளக்கம், கரிகாலன் இறப்பை எண்ணிப், புலவர் கருங்குழல் ஆதனார் பாடிய கையறு நிலைச்செய்யுளில் காணப்படுகிறது: “அறத்தைத் தெளிய உணர்ந்த ஒழுக்கத்தால் மாட்சிமைப் அந்தணர்களின் அவையின்கண், வேள்விக்குரிய நன்றாக உணர்ந்த ஆறங்கங்களையும் உணர்ந்த வேள்விச் சடங்குகளை முன்னின்று காட்ட, பட்ட, தூய இயல்பு வாய்ந்த கற்பு, ஒழுக்கமாம் உயர்ந்த கொள்கையினராய, குற்றம் தீர்ந்த