பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

தமிழர் வரலாறு

வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல்
வளையுபு மலிந்த கோடுஅணி சேயும்,
பொருமுரண் முன்பின் புகலேறு பலசெய்து
அரிமாவும், பரிமாவும் களிறும் கராமும்
பெருமலை விடரகத்து ஒருங்குடன் குழீஇப்
படுமழை ஆடும் வரையகம் போலும்
கொடி நறை சூழ்ந்த தொழுஉ.

தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு.

ஏற்றின் அரிபரி பறுப்பன சுற்றி
எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவ மாலை போலக்
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன:

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின்முன்
ஆடிநின்று அக்குடர் வாங்குவான் பீடுகாண்:
செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற அந்நூலை
முந்நூலாக் கொள் வானும் போன்ம்.

இகுளை! இஃதொன்று கண்டை: இல்தொத்தன்
கோட்டினத் து ஆயர் மகன் அன்றே! ஓவான்
மறைஏற்றின் மேலிருந்து ஆடித் துறை அம்பி
ஊர்வான்போல் தோன்று மவின்.

தொழீஇ, காற்றுப்போல் வந்த கதழ்விடைக் காரியை
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு அட்டு அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை!
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடத்திட்டுச்