பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதிகாரம் : XXIX
கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

ஐங்குறு நூறு

இத்தொகை நூல், ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு தினை குறித்த நூறு பாக்களைக் கொண்ட ஐந்து பிரிவுகளைக் கொண்டுளது. ஒவ்வொரு நூறும் ஒவ்வொரு புலவரால் பாடப் பெற்று, ஏறத்தாழ, தொல்காப்பியர் கூறிய விதி முறைப்படி, அத்திணையின் ஒரு துறை குறித்த பத்துப் பாடல்களைக் கொண்டது ஒரு பிரிவாகப் பத்துப் பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுளது. ஒவ்வொரு புலவரும், இலக்கண ஆசிரியரின் விதி முறைகளுக்கான எடுத்துக்காட்டுக்களையே வகுத்துள்ளனராதலின், இத் தொகை நூல், உடனடி உள்ளத் தூண்டலால் அவ்வப்போது பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு ஆகாது. இவை, புலவர்கள் தவறாது பின்பற்றப்பட வேண்டிய தலையாய வழிகாட்டும் ஆவணமாகத் தொல் காப்பியம் ஆகிவிட்ட பின்னரே பாடப்பெற்றனவாதலின், இப்பாடல்கள், அகத்தூண்டுதலால் தன்னை மறந்து வெளிப்படும் இயல்பை இழந்துள்ளன. நம் ஆய்வுக்குப் பயன்படா. ஆகவேதான், இதன் எந்த ஒரு பாடலும் மொழி பெயர்த்துக் காட்டப்படவில்லை : எந்த ஒரு பாட்டும், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர்ப் பாடப் பெற்றிருக்காது.

பரிபாடல் எழுபது

இத்தொகையைச் சேர்ந்த எழுவது பாடல்களில் இருபத்திரண்டு முழுப்பாடல்களும், ஒரு சில குறை பாக்களுமே கிடைக்கின்றன. இவற்றுள் ஆறு, விஷ்ணுவைப் பற்றியன: எட்டு முருகனைப் பற்றியன: எட்டு வையை ஆற்றைப் பற்றியன. கடவுள்களைப் பற்றிய பாடல்களில், திருப்பரங்