பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழர் வரலாறு


தோடு, ராஜசூயம் என்ற யாகத்தைச் செய்து, ராஜசூயம் வேட்ட என்ற சிறப்புத் தொடரைத் தன் பெயரோடு இணைத்துக் கொள்வதும் செய்தான். இவ்வாறு வேத வேள்விகளைச் செய்திருக்கவும், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, சோழர் குலம், விரைந்து நிலைகுலைந்து போய், தென்னிந்திய வரலாற்றில் சில நூற்றாண்டு காலம் பெரும்பாலும் மறைந்தே போய்விட்டது.

பார்ப்பனத் தமிழ்ப் புலவர்கள் :

கரிகாலனின் செயலும் சிந்தனையும், ஆரிய நாகரீகத்திற்கு முழுமையாக அடிமைப்பட்டுப் போனதன் மற்றொரு விளைவு, பல பார்ப்பன்த் தமிழ்ப்புலவர்களின் தோற்றமாம்: இது, ஆரியக் கருத்துக்களுக்கு ஆட்பட்டுவிடாவாறு தமிழ்ப் புலவர்களைத் தடுத்துக் காத்துவந்த அணையை உடைத்து விட்டது. ஆரிய நம்பிக்கைகள், ஆரிய மூட நம்பிக்கைகள், ஆரியப் பழக்க வழக்கங்கள் (சமஸ்கிருதச் சொற்கள்) தமிழர் வாழ்க்கையில் நுழைந்து, தமிழ்ப் பாக்களில், தென்னிந்திய கருத்துக்கள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை அடுத்தடுத்துக் கூறப்படவுமாயின. இவற்றை வெளிப்படுத்தும் பாக்கள், ஆரிய மூலம் அறவே இடம் பெறாத பாக்களிலும் காலத்தால் பிற்பட்டவை என்பதை எளிதில் காணக்கூடும். தமிழ் அரசர்களும், புராண அரச மரபுகளாம். சூரிய, சந்திர மரபுகளோடு தங்களை இணைத்துக்கொள் வ்தைத் தேடி அலைந்தனர். இவற்றிற்கான எடுத்துக்காட்டுக்கள்,பின்வரும் அதிகாரம் ஒன்றில் கொடுக்கப்படும்.

கரிகாலன் வாழ்க்கையில் கல்வெட்டுக்கள் அளிக்கும் விளக்கம் :

கரிகாலன் வாழ்க்கையை, இதுகாறும், சமகால இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்ந்தோம் : கரிகாலன் வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகளுக்கான கல்வெட்டுச் சான்று உறுதிப்பாட்டினை இச் சோழமன்னன் காலத்துக்குப் பிற்பட்ட காலத்துக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் காதுவழிச் செய்திகளிலிருந்து பெறக்கூடும் அவ்-