பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தமிழர் வரலாறு


நடக்க இயலாத, நம்புதற்கு இயலாத, இயற்கையொடு பொருந்தாச் செய்திகள், புகார், மதுரைக் காண்டங்களிலும், வஞ்சிக் காண்டத்தில் அதிகம் என்பது அவர் கூறும் இரண்டாம் காரணம்; அவ்வாறு கூறியவர் அவை எவை எவை என எண்ணிக் கூறினாரல்லர். ஆனால், உண்மை நிலை அது அன்று; மாறுக, நேர்மாறானது: அவை வஞ்சிக் காண்டத்தில் ஒன்றோ இரண்டோதான்: ஆனால் புகார், மதுரைக் காண்டங்களில் தான் அதிகம்.

வானவர் வந்து மலர்மாரிபொழிந்து, கண்ணகியைக் கோவலனோடு வானாடு கொண்டு சென்றது ஒன்று “வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து, குன்றவரும் கண்டு திற்பக் கொழுநனொடு கொண்டு போயினார்.” (குன்றக் குரவை : 8-9.), “கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து, தனித் துயர் எய்தி, வானவர் போற்ற மன்னெடும் கூடி, வானவர் போற்ற, வானகம் பெற்றனள்” (காட்சிக் காதை: 57-60):

கணவனோடு வானாடு அடைந்து விட்ட கண்ணகி, மின்னுக் கொடிபோல் மீவிசும்பில் தோன்றிச், செங்குட்டுவனுக் காட்சி அளித்துத் தென்னவன் தீதிலன். நான் அவன் மகள்” எனக் கூறியது இரண்டாவது (வாழ்த்துக் காதை).

மாலதி என்பாள் மாற்றாள் குழவிக்குப் பால்சுரந்து ஊட்டுங்கால் பால் விக்கி அக்குழவி இறக்க, அதற்காகத் தன்பால் பாடுகிடந்த அம்மாலதியின் அன்புக்கு இரங்கி, அக்குழவியாய் வந்து, வளர்ந்து, பெற்றோர் கடன் தீர்த்து பார்ப்பனி தேவந்தியை மணங்கொண்டு சில நாள் கழித்து நீராடப் போவதாகக் கூறி மனைவியைப் பிரிந்து மறைத்து போன மாசண்டன் கதை மூன்றாவது.

மாலதி என் பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்டப் பழவினை உருத்துக்
கூற்று உயிர் கொள்ளக் குழவிக்கு இரங்கி,

ஆற்றாத் தன்மையள் ஆரஞர் எய்திப்