பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

488

 எல்லைக்கு வடக்கில் சில மைல் வரை (கடம்பர் நாட்டிலும், கொண் கானத்திலும்) படையெடுத்துச் சென்று, சில வெற்றிப் பொருட்களைக் கொண்டு வந்திருக்கக் கூடும். புலவர்கள், பரிசில் பெரும் வேட்கை மிகுதியால், அச்செயலை இந்தியப் பெருநாடு முழுவதும், அவன் பேரரசின் விரிவாகக் கொண்டு. பாராட்டவும், அதன் காரணத்தால், இமயத்தை எல்லையாகக் கொண்ட பெரு நாட்டிற்கு உரியவன் எனும்பொருளுடைய தான இமயவரம்பன் என்ற பட்டப்பெயரைச் சூட்டி இருக்கவும் கூடும். [It is not easy to discover the grain of fact within this straw-heap of flattering verbrage. Possibly Nedunjeral marched a few miles north of the sera country (into the Kadamba territory or konkan and brought back some presents, and poets eager for reward, spoke of it as the expansion of his Empire throughout the whole of India. And they thence gave him the title ‘Imayavaramban’, he whose kingdom had the Himalayas as its boundary” (Page : 502-503] எனக் கூறி எள்ளி நகையாடியுள்ளார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடம்பர் என்ற இனத்தவரை வென்று, அவர் காவல் மரமாம் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்திய செய்தி, “கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின. வேந்தன்’ (பதிற்றுப் பத்து 12, 20), “கடம்பு முதல் தடிந்த காவலன்’ (சிலம்பு : வாழ்த்துரை : ஊசல்வரி), ‘கடந்தடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை’ (சிலம்பு : வாழ்த் துரை:வள்ளைப்பாட்டு) என்ற வரிகளில் உணர்த்தப்பட்டுளது. என்றாலும், அவ்வரிகள், சேரலாதனால் வெற்றி கொள்ளப் பட்ட அக்கடம்ப இனத்தவர் பற்றிய, அவர் வாழிடம் பற்றிய எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது உண்மை, .

ஆனால், ‘முந்நீர் ஒட்டிக் கடம்பு எறிந்து” (அகம் : 1.72) ‘முந்நீரினூள்புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் (சிலம்பு :ஆய்ச்சியர் குரவை 3), ‘கடற்கடம்பு எறிந்த கடும்போர்’, (சிலம்பு : காட்சி : 187), “கடற்கடம்பு எறிந்த காவலனன்

த. வ. Il-80