பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

தமிழர் வரலாறு


டாலும், நடைமுறையில், பக்தியை ஆடல் பாடல்களாகவே, இன்னமும் கொண்டிருக்கும் கபீர்பந்தா, சைதன்யபந்தா போலும் வடநாட்டு மார்க்கங்களும், இதிலிருந்தே வளர்ச்சி பெற்றன.

ஞான மார்க்கம்

தொடக்ககாலம் தொட்டே, தென் இந்திய பிராமணர்கள் ஆரியக் கருத்துக்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு கொண்டு இருந்தனர். பெளத்த மதக்கொள்கையின் பிற்கால வளர்ச்சியின் ஒரு பிரிவு மதாசாரியராகிய நாகார்ஜூனப் பேராசிரியர் தென்இந்தியாவைப், பெரும்பாலும் காஞ்சியைச் சேர்ந்தவராவர்.

பெயர் அறிய மாட்டாச் சமஸ்கிருத நூல் ஒன்றில், நாகார்ஜுனர், ஒரு மந்திரவாதியாக அதாவது சித்தி பெற்றவராகப் புகழப்பட்டுள்ளார். அதே உணர்வில், அதுபோலும் சூழ்நிலையில் வேறு ஒர் இடத்திலும் அவர் கூறப்பட்டுள்ளார். அதன்படி, பிராமணர் குலத்தில் பிறந்த நாகார்ஜுனர், கிழக்கு இந்தியாவில் உள்ள காஞ்சியின் ஒரு பகுதியாம் கஹொரத்தில், தங்கியிருந்தபோது தாரா என்பவளிடம் சித்திகளைப் பெற்றதாகவும், பின்னர் நாட்டில் நிலவிய கொடிய வறுமையின் போது, தான் உடைமைகள் அனைத்தையும் கஹொரத்துப் பிராமணர்களுக்கு அளித்துவிட்டு அகன்று விட்டதாகவும், பின்னர், ராஜக்கிறகத்தை அடுத்த சீதவனத்தைக் கடந்து, துறவு நிலைபெற்று, ஐவகை சீலத்து அறிவின் எல்லையைக் கண்டு கொண்ட நாளந்தாவை, இறுதியாக அடைந்ததாகவும், அதன் பின்னர், உபதேசம் செய்வதில் வெறுப்புற்றுத் தாராவைக் காதலித்து, அவள் இசைவினை எதிர்நோக்கிக் காத்திருந்ததாகவும், அங்கும் உணவுக்கும் உறையுளுக்கும் தட்டுப்பாடு உண்டாகவே, பிறந்த மண்ணுக்கே மீண்டுவந்து விட்டதாகவும், பின்னர், ராஜ கிருகத்திற்கு மறுவலும் சென்று ஆங்கு பன்னிரண்டு ஆண்டுகள் இருந்து விட்டுப் பின்னர்க் கந்தசைலமலைக்குச் சென்ற