பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

495


தாகவும், அதன் பின்னர்த் தென்னகத்தே உள்ள ஶ்ரீ பர்வதத்தை அடைந்து, தம் எஞ்சிய வாழ் நாட்களை ஆண்டே கழித்ததாகவும் கூறப்பட்டுளது.

தின்னாகர், புத்த தத்தர், தர்மகீர்த்தி ஆகியோர், பெளத்த மதத்தின் கொள்கை கோட்பாடுகள் குறித்த நூல்கள் எழுதிய பிற சான்றோர்கள் ஆவர். (M. Waleser, “The life of Nagarjuna from Tibetan and Chinese sources” Page : 3]

ஒரு பெளநாயனர், மீமாம்சத்தின் பூர்வ, உத்தா என்ற இரு பகுதிகளுக்கும் 'கிந்த கோடி’ எனும் பெயருடைய விர்த்தி எழுதினார். [Journal of Indian History Vol. I; Chap . 13: Page ; 101-113). வேதாந்த சூத்திரத்திற்கான தம்முடைய உரையில், சங்கராச்சாரியார், மேற்கோள் காட்டிய வார்த்திசுத்தின் உரிமையாளன். ஆச்சாரிய சுந்தர பாண்டியனாவன் என்பது திருவாளர் எஸ். குப்புசாமி சாஸ்திரி அவர்களால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது (Journal of Oriental Research : Vol : I. Page : 5-15] கந்தர பாண்டியனுடையதாகக் கூறப்படும். மக்களின் ஒழுக்கம் பற்றியதான 'நீதி த்வி சஸஸ்டிகர்’ என்னும் நூல், அண்மைக்காலத்தே கண்டுபிடிக்கப்பட்டு, அச்சிடப்பட்டுளது. [By V. Prabhakara Sastrij]அதிலிருந்து சில பகுதிகள் பஞ்ச தந்திரம், ஜனாஸ்ரயீ ஆகிய நூல்களில் எடுத்துக் காட்டுக்களாக வந்துள்ளன. ஆகவே, சுந்தரபாண்டியன், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவனாதல் வேண்டும். சுந்தர பாண்டியன் என்பது பல அரசர்களின் பெயராக நன்கு தெரிந்த பெயராதலின், இந்த ஆச்சாரியனை மதுரை ஆண்ட ஒர் மள்னனாகக் கொள்ளும் ஒர் ஆர்வமும் உளது. பாண்டிய அரசர்களில் எவரேனும், இதுபோலும் நூல்களை எழுத வல்லவர் என என்னால் நினைக்க முடிய வில்லை. சுந்தரபாண்டியன் என்பது பாண்டிய நாட்டைச் சேர்ந்த சுந்தரன் எனப் பொருள்படும் என்றே நான் கருதுகின்றேன்.