பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496

தமிழர் வரலாறு

கி. பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, நாடு முழுமைக்குமான தத்துவ மெய்ஞ்ஞான அறிவினை உருவாக்கிய எண்ணற்ற பேரறிஞர் பெருமக்கள், தென்னிந்தியாவில் தோன்றி வந்துள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் சங்கராச்சாரியார். வேதாந்தத்திற்கான அவர் விளக்கம் மெய்ஞ்ஞான உணர்விற்கான மிகச் சிறந்த ஒன்று அது, வெறும் கற்பனையாகாது, தனி மனிதன் உயிர், மற்றும் இயல் உலக அண்டம் ஆகியவற்றின் தனித் தன்மையை, மேலும் சுருங்கச் சொல்வதாயின், வாழ்தற்காம் நிலையை, ஆத்மா தன்னைத்தானே உணர்தல் அல்லது வேறு இல்லையாம் நிலையைக் கண்டு கொள்ள வல்ல ஆன்மீகத்தின் அனுபவம் ஆகும். இந்நெறியைப் பின்பற்றுதல், கத்திமுனைக் கூர்மை போலும், நுண்ணிய பாதை மீது செல்வதற்கு ஒப்பாகி, நனி மிகக் கொடிய இடர்ப்பாடுகளோடு கூடியதாம்.

அடுத்தவர், கொடிய வேதாந்த நெறிக்கும், எளிய ஆகம (வைஷ்ணவ ஆகமம்) நெறிக்கும் இடையில் ஒர் உடன் பாட்டினைக் கொண்டு வந்தவராகிய ராமானுஜர் ஆவர். ஆனந்த தீர்த்தர், ராமானுஜரைக் காட்டிலும், ஆகம உண்மைகளை மிக அதிகமாக வற்புறுத்தினார். வட இந்தியாவில் 'பைஷ்ணவ்” என அழைக்கப்படும், சமயத்தோடு சார்ந்த மெய்ஞ்ஞான முறை, இதிலிருந்து தோன்றி வளர்ந்தது. நீலகண்ட - சிவாச்சாரியர் போலும், பிற, தென்னிந்திய ஆச்சாரியர்கள். வேதாந்தத்தையும், சைவ. மற்றும் சாக்த ஆகமங்களின், கொள்கை வழிபாட்டு தெறிகளை ஒன்றுபடுத்தி இணைத்தனர். வட இந்தியாவில், சைவ, சாந்த நெறிகளின் வளர்ச்சிக்கு, இவையே தூண்டு கோலாயின.

நனி மிகப் பழங்காலத்தில் போலவே, தனி மிக அண்மைக் காலத்திலும், ஆண்டாண்டு காலமாக, இந்தியாவின் இருதயமாகத், தென்இந்தியா இயங்கி வந்துளது. பழங்கால மனிதனின் கைத்திறன் காட்டும் பழம்பொருள் நினைவுச் சின்னங்கள், தென்னிந்தியப் பீடபூமியின் கிளையாம் மலைக்