பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

497

குன்றுகள் மீதே காணப்படுகின்றனவாதலின், கற்காலத் தொடக்க நிலையில், மக்கள் தென்னிந்தியாவில் மட்டுமே வாழ்ந்திருந்தனர். அதன் பின்னரே, வடஇந்திய ஆற்றுப் படுகைகளுக்குச் சென்றது போலவே, அவர்கள் தென்னிந்திய ஆற்றுப் படுகைக்கும் சென்று குடியேறினர். இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு, தென்னிந்திய மக்களுக்குத் தொழில்துறையில் கருவிகளாகத் துணைபுரியத் தொடங்கிற்று. அங்கிருந்து அது, சைந்தவ நாகரீகத்தின் தேவையை நிறைவேற்ற, கி. மு. 300 க்கு முன்னர், வடநாட்டிற்குச் சென்று பரவியது. இந்நிலை. நனிமிகப் பழங்காலத்திலேயே இருந்தமைக்கான் சான்று, நிலம் என்னும் நல்லாளின் நல்ல இருதயத்திலிருந்து, அண்மையில் அரும்பாட்டிற்கிடையே அகழ்ந்து எடுக்கப்பட்டது. தோன்றிய காலந்தொட்டே இலக்கியத்தோடு தொடர்பு கொண்டு, அதன் காரணத்தால், பேரறிஞர்களின் வழிகாட்டினைத் தனக்கே உரிமை கொண்டாடும், ஆரியம் என அழைக்கப்படும் நாகரீகம், சில காலம் கழித்துத் தோன்றிற்று. இந்த ஆரிய நாகரிகம், தத்துவங்கள், கடவுள் வழிபாட்டு நெறிகள் , சமயக் கட்டுப்பாடு ஆகியவற்றின் பலவேறு நிலைகள், வரலாற்றுக் காலத்தில், வடநாட்டில் வளர்ச்சி பெற, இறுதியாக வழிவகுத்தது. பல்வேறு பிரிவுகளையுடையதாய், எளிதில் புரிந்துகொள்ள இயலா நிலையினதான, இந்த நாகரீகம், அதுவரை இயற்கையோடியன்ற இலக்கியத்திலும், சமயப் பாடல் ஆடல்களில் மட்டுமே கருத்துான்றியிருந்த தமிழ்ச் சமயப் பயிர்க்கு உரம் ஊட்டிவிட்டது. வாழ்க்கையின் கலை, மற்றும் சமய நோக்கில் ஒரு திடீர் எழுச்சி எழுந்து விட்டது. பக்தி என்றும் ஞானம் என்றும் அழைக்கப்படும் பேரொளி காட்டும் தீயின் இரு தாக்குகளாம், கலை சமயம் என்ற இருபெருத் தீக்கள் ஒன்றுகலந்துவிட்ட, இறைவனைத் தேடி அலையும் இந்துக்கள் அனைவர்க்கும், அவ்வாறு தேடி அலையும் அவர் காலடிகட்கு ஒளிதந்து வழிகாட்டும் ஒரு பெருந்தீப்பிழம்பு எனக் கருதத்தக்க ஒரு திடீர் எழுச்சி தோன்றிவிட்டது: ஆகவே, பண்டும், இன்றும் உண்மையான இந்து எனக்

த வ. !!-32