பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் தமிழர்

101


நம் மூதாதையர் சொன்ன சொல்லை விரிவாகக் காட்டியிருக்கிறார்கள். இமயமும், ஆல்ப்ஸ் மலையும் வளர்ந்து கொண்டிருந்த காலத்திலே, அப்போதிருந்த நிலப்பரப்பு. அத்தனையும் காட்டப்படுகிறது. இமயம் ஆழ்ந்து, குமரிக் கோடு உயர்ந்திருந்த நம் பழந்தமிழ் நாட்டு நிலை நன்கு சித்திரிக்கப்பெறுகிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அவற்றையெல்லாம் படியெடுத்துக்கொண்டு வந்து ஒரு நூல் தயாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

அதேபோல் மற்றொரு பக்கத்திலே தென் அமெரிக்க நாகரிகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு: நாகரிகம், தென் அமெரிக்க. மாயா நாகரிகம் இரண்டும். ஒத்தன என்று நிறுவக்கூடிய சான்றுகள் பல உள்ளன. உருவ வழிபாடு, கோயில் அமைப்பு பிற அனைத்தும் தமிழ். நாட்டு மரபை ஒட்டியிருக்கின்றன. அமேசன் நதிக் கரையில் பல இடங்களில் சிவலிங்க உருவம் கிடைக்கின்றது என்கின்றனர் சிலர். ஆகவே, தமிழ்நாட்டு மரபு அங்கு. போற்றப்படுவதை அறிகின்றோம். தமிழாக இல்லா விட்டாலும் தமிழ் வேறு வடிவத்தில் காக்கப்படுகிறது.

அடுத்து நான் செல்ல வேண்டியது – பணியேற்கச் செல்ல வேண்டிய பல்கலைக் கழகம் பென்சில்வேனியா. இது பிலடெல்பியா தலைநகரில் உள்ளது. அங்குள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த விடுதியில் எல்லா நாட்டு மக்களும் தங்கியிருந்த காரணத்தால் எல்லோரையும் வரவேற்கின்ற நிலையிலே – போற்றப்படுகின்ற நிலையிலே – அந்தந்த விடுதிகளில் வரவேற்புக் குறிகள் போடப்பட்டிருந்தன. அங்கே தமிழில் ‘வணக்கம்’ என்றும் போடப்பட்டிருந்தது. அந்தப் பெரிய விடுதியில் தமிழை. மனத்தால் படிக்கின்றனர். தமிழ்நாட்டில், ‘இருந்தமிழே’ உன்னால்,இருந்தேன்,என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கே ‘இரு தமிழே உனக்காக இருந்தேன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/103&oldid=1358372" இலிருந்து மீள்விக்கப்பட்டது