பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழர் வாழ்வு


என்கின்றனர். அங்குப் பாடத்திட்டம் கிடையாது. அங்கு மாணவன் விரும்பிய பாடத்தை எடுத்துக்கொள்ளலாம். ஓர் அமெரிக்கர் சங்க இலக்கியத்தையும், மற்றொருவர் இடைக்கால இலக்கியத்தையும் தம் பாடமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

அப்பல்கலைக்கழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் இருந்த சூரிய வணக்கத்தைப்பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார் ஒரு மாணவி. அதனை மதிப்பிடும்போது, அம் மதிப்பீட்டுக் குழுவில் நானும் இருந்தேன். அவர் அமெரிக்கப் பெண்ணாக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டு நல்லவருக்கு வாழ்க்கைப்பட்ட பெண்மணி. பி.ஏ வாக இருந்தாலும் எம்.ஏ. வாக இருந்தாலும் மூன்று ஆண்டுகளிலும் முடிக்கலாம், ஐந்து ஆண்டுகளிலும் முடிக்கலாம்; பத்து ஆண்டுகளிலும் முடிக்கலாம். தமிழ் நாட்டிலிருந்து எம்.ஏ. படித்து முடித்த நெடுமாறான் என்னும் ஆங்கில ஆசிரியர் அங்கு சென்று தமிழ் எம்.ஏ. பயின்று கொண்டிருக்கிறார்; தமிழ் கற்றுக் கொடுக்கிறார். அங்குத் தமிழாராய்ச்சியும் செய்கிறார்கள். திருமதி இராசம் அம்மையார் பேராசிரியராக இருக்கிறார். இப்படிப் பிலடெல்பியாவில் தமிழாராய்ச்சியும் தமிழும் நல்ல முறையில்வளர்ந்து கொண்டிருக்கின்றன.

அங்கே பிரஞ்சு, ஆங்கிலம், வடமொழி எது படித்தாலும் வேற்றுமொழி ஒன்றைப் படிக்கவேண்டும். அந்த வகையில் தமிழ் எடுத்துப் படிப்பவர்களும் இருக்கிறார்கள்.

தலைநகர் வாஷிங்டனில் தமிழ் கிடையாது. அந்நகரில் சமய சம்பந்தமாகப் பல கூட்டங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கே சங்கராச்சாரியார், மத்துவாச்சாரியார், இராமானுஜாச்சாரியார், வல்லபாச்சாரியார் போன்றவர்களின் சமயம் பற்றிப் பேசினர். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/104&oldid=1358377" இலிருந்து மீள்விக்கப்பட்டது