பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழர் வாழ்வு



சிகாகோ பல்கலைக்கழகத்தில் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளனர். ஸ்தல புராணத்தை ஆராய்ச்சி செய்து பெரிய நூல் வெளி வந்துள்ளது. நம்மாழ்வார் பாடல்களில் நூறு பாடல்களை மொழிபெயர்த்துள்ளார்கள். அங்குத் தமிழ் வகுப்புகள் சிறப்பாக நடைபெறுகின்றன. தமிழ்ச் சங்கம் உண்டு. தமிழ்ப் பத்திரிகையும் நடத்துகிறார்கள். அவையாவும் தமிழ் வளர்ச்சியைக் காட்டுகின்றன. அங்கே நம் நாட்டைச் சேர்ந்த திரு. டாக்டர் இராமாநுசம் அவர்கள் தலைவராக உள்ளனர்.

விஸ்கான்சன் பல்கலைக் கழகத்திலும் ஹாவாயிலும் தமிழ் உள்ளது. அங்கெல்லாம் சென்று பார்வையிட்டேன். நூல்நிலையங்கள் நன்கு உள்ளன. விடுமுறையானதால் துறையில் உள்ளாரைக் காண முடியவில்லை. சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றபோது ‘பாஷாம்’ என்ற பேரறிஞர் – வடமொழி, தமிழ் அறிந்த அவர் சிறப்புரை ஆற்றினார். நான் சென்ற நாளில் கீதை. பற்றிய பேச்சு. சிகாகோவில் மட்டுமன்றி அமெரிக்காவில் எந்தப் பல்கலைக் கழத்திலும் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன. எந்தத் தொழிலும் அரசாங்கத்துக்குக் கிடையாது. ரேடியோ, டெலிவிஷன், இரயில், விமானம் போன்ற எல்லாவற்றினையும் தனி நிறுவனங்களே பொறுப்பேற்றுள்ளன. பல நிறுவனங்கள் அங்குள்ளன. ஆனால் நிரந்தர வேலை கிடையாது. கடின உழைப்புக்கும் பயன் உண்டு, அவையே பல்கலைக் கழக ஆய்வாளரை ஊக்குவிக்கின்றன.

வாஷிங்டன் மாநிலத்தின் சியேட்டல் என்பது தலைநகர். அங்கு, நம்நாட்டில் செய்யாத ஒரு நல்ல பணியைச் செய்கிறரர்கள். அங்கே, ஜப்பான் கம்யூட்டர் மூலமாகத் தமிழ் வினைச்சொற்களை மட்டும் எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/106&oldid=1358396" இலிருந்து மீள்விக்கப்பட்டது