பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் தமிழர்

105


கொண்டு அகராதி தயார் செய்கிறார்கள் அதனை இயக்குபவர் ஜப்பானியப் பெண்மணி. அவருக்குத் தமிழும் தெரியாது; ஆங்கிலமும் தெரியாது. ஜப்பான் மொழி தான் தெரியும். அந்த, மிஷினுக்கும் ஜப்பான் ஆங்கிலம் தான் தெரியும்; அதனைச் சரிப்படுத்தி, அதனைத் தமிழாக்கிக் கொண்டுவந்து தமிழிலே எழுதி, அவற்றிற்கு விளக்கமும் எழுதி, அதற்குத் தேவையான தமிழ்க் கோவையினையும் ஆங்கில உரைகளையும் கொடுத்திருக்கிறார்கள் அங்கே உள்ள தமிழ்த் துறையினர். சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் ஹேரால்டு சிப்மென் என்னும் துறைத்தலைவர்.

அங்கொரு அமெரிக்கர் தமிழ்நாட்டு உதகை (கூடலூர்) நாகரிகத்தை எல்லாம் பார்த்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டத்துக்குத் தந்துள்ளார். இருவர் இசையைப் பற்றி அறியத் தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்கள். நாட்டுப்புறம் காணலாம் என்று 80 மைல் தொலைவில் உள்ள கிராமத்திற்குச் சென்றேன். அங்குள்ளவரில் சிலர் அமெரிக்க இந்தியர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கிறார்கள்.

கிராமத்தில் அவர்கள் வழிபடும் பெரிய பெரிய சிலைகள், தூண்கள் இருந்தன. இவை நம்மூரை நினைவு. படுத்துகின்றன. கோயில்களின் உள்ளே சென்று பார்த்தேன். கிராமங்களில் பழங்கால மரபு போற்றப்படுவது தெரிகின்றது. சான் பிரான்ஸிஸ்கோ நகரில் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளது. அது உள்ள, புர்க்கிலே நகரில் ஜார்ஜ்ஹாட் என்ற அமெரிக்கர். கெளசல்யா என்னும் தமிழ்ப் பெண்மணியை மணந்துள்ளார். நல்ல தமிழ் அறிஞர் சைவர். அவர்தம் வீட்டில் நடராசர், பிள்ளையார், முருகன் போன்ற சிலைகள் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/107&oldid=1358398" இலிருந்து மீள்விக்கப்பட்டது