பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழர் வாழ்வு



அக்கலிபோர்னியா பல்கலைக்கழக எல்லையில் 86 வயதான எமனோ என்பவர் இருக்கிறார். ‘Etimological Dictionary’ யைத் தமிழில் தொகுத்தவர் அவர். அவரைப் பார்க்க வேண்டும் என்று தொலைபேசியில் கூறினேன். ‘நீங்கள் வராதீர்கள்’ என்றுசொல்லி அடுத்தநிமிடத்திற்குள் அவர் அங்கு வந்துவிட்டார். இவர் பாலி மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைத் தற்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். சிலப்பதிகாரமெல்லாம் அங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல தமிழை அங்குப் படிக் கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழைச் சாகடித்தாலும்கூட நிச்சயமாக அது வெளிநாட்டில் வாழும்.

அடுத்து உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றேன். அங்குத் தமிழ் கிடையாது. தமிழர் நிறைய இருக்கிறார்கள். ஹாலிவுட் அழகாக இருந்தது. பத்துக் கட்டளைகள்' என்ற படத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள். ஏசுநாதர் அங்கே கடலைத் தாண்டிப் போனமை போல் நானும் கடலைத் தாண்டிச் சென்றேன். டிஸ்டினிலேண்டு பார்க்கவேண்டிய இடம்.

ஹாவாய் ஆதினத்தில் 5 நாட்கள் தங்கியிருந்தேன். அது அமெரிக்காவைச் சேர்ந்தது. அமெரிக்காவிலிருந்து 3000 மைல் தூரத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் நடுவில் உள்ளது. அங்குத்தான் சைவ சித்தாந்த மடம் உள்ளத. கோயிலுக்குள் நடுவில் நடராஜர், ஒரு பக்கம் விநாயகர், ஒரு பக்கம் முருகன், ஒரு பக்கம் அர்த்தநாரீஸ்வரர். மதுரையிலிருந்து குருக்கள் சென்று பூசை செய்கிறார்.

ஹாவாயில் தேவாரம், திருவாசகம் எல்லாவற்றையும் ஆங்கிலத்திலே கற்றுத் தருகிறார்கள். திருமூலர், திருவள்ளுவர்தம் பெருஞ்சிலைகள் வாயிலின் இரு பக்கங்களிலும் அணி செய்கின்றன. அங்கே வழிபாட்டில் தமிழ்ப் பாடல்களையும் பாட, நான் சொன்னபடி ஏற்பாடு செய்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/108&oldid=1358401" இலிருந்து மீள்விக்கப்பட்டது