பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழர் வாழ்வு



ஹர்ங்காங்கில் தமிழர் பலர் வாழ்கின்றனர். தமிழ்ச் சங்கமும் உள்ளது. ஆயினும் தமிழ்பற்றிப் பேசி, வளர்க்கும். நிலுை அங்கே இல்லை. பலர் அடிக்கடி தாய்நாடு வந்து செல்கின்றனர். வீடுகளில் தமிழ்தான் உண்டு. பல குழந்தைகள் தமிழ்நாட்டிலேயே கல்வி பெறுகின்றனர்.

மலேயாவில் பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கின்றனர் மலேயாவை வளப்படுத்தியவர்களே தமிழர்தாம். தற்போது தமிழர் தொகை குறைகின்றதென்றாலும் தமிழ் அங்கே பள்ளிகளிலும், பல்கலைக் கழகத்திலும் முக்கிய பாடமாக உள்ளது. பல்கலைக் கழகம் தொடங்கும் காலத்தில் இந்திய மொழித்துறையில் வேற்று மொழி இடம் பெற். இருந்தபோதிலும், ஓமந்துரார் – பக்தவத்சலம் அவர்கள் காலத்தில் தமிழே இருக்கவேண்டும் என முயன்று வெற்றியும் பெற்றனர். எனவே மலேயா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை சுமார் பதின்மர் கொண்டு சிறப்பாகப் பணியாற்றுகின்றது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தமிழ் பயில்கின்றனர். எனினும் வளர்ச்சி அதிகம் என்று சொல்ல முடியாது. பல்கலைக் கழகத்திலே வகுப்புகளில் தமிழ் உள்ளதோடு ஆராய்ச்சியும் நடைபெறுகின்றமை போற்றற்குரியது. மலேயாவில் எல்லாப் பகுதிகளிலும் தமிழ் மக்கள். வாழ்கின்றமையின் அந்நாடு தமிழ்நாட்டினைப் போன்றே உள்ளது. தமிழுக்கெண் அரசாங்க்த்திலும் தனித்துறை அன்மத்துச் செயலாற்றி ஏற்பாடு செய்துள்ளனர்.(இந்நிலை, நான் முன்னரே குறித்தபடி தமிழ்நாட்டிலும் இல்லாத ஒன்று)

மாலேயா முழுவத்ழ் முருகன் கோல்லும் பிற கோயில்களும், மரியம்மன் கேர்யில்களும் நம் நகரத்தாராலும். பிந்தமிழர்களாலும் கட்டப்பெற்றுவழிபாடும் விழாக்களும் நடைபெறுகின்ற்ன்: சில விழர்க்க்ள் தமிழ்நர்ட்டிைக் காட்டிலும் சிறப்பாக நடைபெறுவதைக் கண்டார் அறிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/110&oldid=1358415" இலிருந்து மீள்விக்கப்பட்டது